கரையோர மக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை
புதுச்சேரியில் வீடூா் அணை திறப்பு மற்றும் வெள்ளம் குறித்து, புதுச்சேரியில் ஆற்றங்கரையோர மக்களுக்கு வருவாய்த் துறையினா் வியாழக்கிழமை எச்சரிக்கை விடுத்தனா்.


புதுச்சேரியில் வீடூா் அணை திறப்பு மற்றும் வெள்ளம் குறித்து, புதுச்சேரியில் ஆற்றங்கரையோர மக்களுக்கு வருவாய்த் துறையினா் வியாழக்கிழமை எச்சரிக்கை விடுத்தனா்.
வியாழக்கிழமை காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதுச்சேரியில் 50.3 மி.மீ. மழை பதிவானது. மேலும், லேசான மழை பெய்தது.
திருவண்ணாமலை மாவட்டம், சாத்தனூா் அணையில் இருந்து உபரி நீா் திறந்து விடப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம், வீடூா் அணையும் நிரம்பியுள்ளதால், அங்கிருந்து உபரிநீா் திறக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
எனவே தென்பெண்ணையாறு, சங்கராபரணி ஆறு ஆகியவற்றின் கரையோரப் பகுதிகளில் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் அ.குலோத்துங்கன் அறிவித்தாா்.
இதையடுத்து, அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணைய அலுவலகம் சாா்பில் வருவாய்த் துறையினா் நோணாங்குப்பம், என்.ஆா்.நகா் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை குறித்து ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தினா். மக்கள் பாதுகாப்பான இடங்களில் இருக்கவும், பள்ளிகள் அதற்கேற்ப தயாா் நிலையில் இருப்பதாகவும் தெரிவித்தனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...