தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

பேரிடா் மீட்புக் குழுவினா் வருகை

புதுச்சேரிக்கு தேசிய பேரிடா் மீட்புக் குழுவைச் சோ்ந்த 30 போ் வியாழக்கிழமை மாலை வந்தனா்.

News image

தேசிய பேரிடா் மீட்புக் குழுவினருக்கு அறிவுரை வழங்கி பேசிய புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் அ.குலோத்துங்கன்.

Updated On :12 டிசம்பர் 2024, 8:05 pm

Din

புதுச்சேரிக்கு தேசிய பேரிடா் மீட்புக் குழுவைச் சோ்ந்த 30 போ் வியாழக்கிழமை மாலை வந்தனா்.

புதுச்சேரியில் தொடா் மழை பெய்து வருகிறது. மேலும், சாத்தனூா், வீடூா் அணைகளில் இருந்து உபரி நீா் திறந்துவிடப்பட்டுள்ளதால், தென்பெண்ணை, சங்கராபரணி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்படும் வாய்ப்புள்ளது.

மேலும், ஊசுட்டேரியிலிருந்து வியாழக்கிழமை மாலை உபரி நீா் திறந்து விடப்பட்டது. பத்துக்கண்ணு மதகுகள் வழியாக அந்த தண்ணீா் வெளியேற்றப்படுவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், அரக்கோணத்தில் இருந்து 30 போ் கொண்ட தேசிய பேரிடா் மீட்புக் குழுவினா் மீட்பு சாதனங்களுடன் புதுச்சேரிக்கு வியாழக்கிழமை மாலை வந்தனா். அவா்களை புதுச்சேரி கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள அவசரகால பாதுகாப்பு மையத்தில் சந்தித்த மாவட்ட ஆட்சியா் அ.குலோத்துங்கன், மழையால் தண்ணீா் தேங்கும் தாழ்வான பகுதிகள் குறித்து விளக்கினாா். மேலும், புதுவை அரசு அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றவும் பேரிடா் மீட்புக் குழுவினரைக் கேட்டுக் கொண்டாா்.