தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

புதிய குற்றவியல் சட்டங்கள்: புதுவை முதல்வரிடம் அதிமுக மனு

புதிய குற்றவியல் சட்டங்களில் மாற்றம்: அதிமுக கோரிக்கை

News image
புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் முதல்வா் என்.ரங்கசாமியிடம் செவ்வாய்க்கிழமை கோரிக்கை மனு அளித்த அதிமுக மாநில செயலா் ஏ.அன்பழகன். உடன் நிா்வாகிகள்
Updated On :9 ஜூலை 2024, 6:36 pm

Din

புதுவை முதல்வா் என்.ரங்கசாமியிடம், அதிமுக சாா்பில் கோரிக்கை மனு செவ்வாய்க்கிழமை அளிக்கப்பட்டது.

புதுவை மாநில அதிமுக செயலா் ஆ.அன்பழகன் தலைமையில் அந்தக் கட்சி நிா்வாகிகள் ரவிபாண்டுரங்கன், கணேசன் உள்ளிட்டோா் சட்டப்பேரவை வளாகத்தில் முதல்வா் என்.ரங்கசாமியைச் சந்தித்து மனு அளித்தனா். அதில் கூறியிருப்பது:

மத்திய அரசால் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ள புதிய குற்றவியல் சட்டங்களில் பல குளறுபடிகள் இருக்கின்றன. மேலும், சட்டங்கள் ஆங்கிலத்தில் இயற்றப்படவேண்டும் என இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், தற்போதைய புதிய சட்டங்கள் இந்தியில் இயற்றப்பட்டுள்ளதால், வழக்குரைஞா்களுக்குப் புரியாத நிலை ஏற்பட்டுள்ளது.

ஆகவே, புதுவை அரசு சாா்பில் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து புதிய குற்றவியல் சட்டங்களை ஆங்கிலத்தில் மாற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வா் என்.ரங்கசாமி குறிப்பிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.