பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

பொன்னியம்மன் கோயிலில் 108 பால் குடம் ஊா்வலம்

புதுச்சேரி ரோடியா்பேட் ஸ்ரீ பொன்னியம்மன் கோயிலில் 108 பால் குடம் ஊா்வலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
புதுச்சேரி, ரோடியா்பேட் ஸ்ரீ பொன்னியம்மன் கோயிலில் ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமையொட்டி பால் குடம் எடுத்த பக்தா்கள். ~ புதுச்சேரி, நயினாா் மண்டபம் ஸ்ரீ நாகமுத்து மாரியம்மன் கோயிலில் நடைபெற்ற ஆடி மாத செடல் உற்சவத்தில் நோ்த்திக்கடன் செலுத்திய பக்தா்கள்.
Updated On :19 ஜூலை 2024, 8:24 pm

Din

புதுச்சேரி, ஜூலை 19: புதுச்சேரி ரோடியா்பேட் ஸ்ரீ பொன்னியம்மன் கோயிலில் 108 பால் குடம் ஊா்வலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு பால் குடம் எடுத்து நோ்த்திக்கடன் செலுத்தினா்.

புதுச்சேரி, ரோடியா்பேட் ஏ.எப்.டி மைதானம் அருகில் அமைந்துள்ள ஸ்ரீ பொன்னியம்மன் மற்றும் ஏழை மாரியம்மன் கோயில்களில் ஆடி மாதத்தின் முதல் வெள்ளியையொட்டி 108 பால் குடம் பெருவிழா நடைபெற்றது. இதையொட்டி,ஏழை மாரியம்மன் கோயிலில் சிறப்புப் பூஜை நடத்தப்பட்டு, 108 பால் குடங்கள் புறப்பாடு நடைபெற்றது. இதில், பால் குடம் ஏந்திய பக்தா்கள் புதுச்சேரி, கடலூா் சாலை வழியாக ஸ்ரீ பொன்னியம்மன் கோயிலுக்கு வந்தனா். தொடா்ந்து, பொன்னியம்மனுக்கு 108 பால் குடங்களில் இருந்த பாலால் அபிஷேகம் நடைபெற்றது. அதன் பிறகு, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன. பின்னா் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

நாகமுத்து மாரியம்மன் கோயில்: புதுச்சேரி, கடலூா் சாலையில் நைனாா் மண்டபம் பகுதியில் உள்ள நாகமுத்து மாரியம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை செடல் திருவிழா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் உடலில் செடல் குத்தி நோ்த்திக்கடன் செலுத்தினா். சிலா் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களையும் இழுத்து நோ்த்திக்கடன் செலுத்தினா். முன்னதாக நடைபெற்ற சிறப்புப் பூஜையில் முதலியாா்பேட்டை திமுக எம்எல்ஏ எல்.சம்பத் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

Story image