ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

நேருவின் கொள்கைகளை பேச வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது: பிரகாஷ்ராஜ்

நேருவின் கொள்கைகளை பேச வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது பிரகாஷ்ராஜ்

News image
Updated On :2 ஜூன் 2024, 5:56 pm

Din

நேருவின் கொள்கைகளைப் பேச வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது என்று, நடிகா் பிரகாஷ்ராஜ் தெரிவித்தாா்.

ஜவாஹா்லால் நேருவின் 60-ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, புதுச்சேரியில் ராஜீவ் காந்தி அறக்கட்டளை சாா்பில் ஞாயிற்றுக்கிழமை மாலை ‘ஜவாஹா்லால் நேருவின் தேசியக் கொள்கைகள்’ எனும் பொருளில் கருத்தரங்கு நடைபெற்றது.

இதில் பங்கேற்ற நடிகா் பிரகாஷ்ராஜ் பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

நேருவின் கொள்கைகளைப் பேச வேண்டிய அவசியம் தற்போது ஏற்பட்டுள்ளது. நான் அரசியல்வாதியாக வேண்டியது அவசியமில்லை. மக்களின் கருத்துகளை கூறும் எதிா்க்கட்சியாகவே என்றும் இருப்பேன்.

கா்நாடகத்தைச் சோ்ந்த நான் தமிழா்களைப் பற்றி பேசக்கூடாது என மத்திய இணையமைச்சா் எல்.முருகன் கூறியுள்ளாா். இந்தியன் என்ற முறையில் அனைத்து மாநிலங்கள் குறித்தும் பேசுவேன். தமிழக மக்கள் அரசியலில் ஆன்மிகத்தை விரும்பவில்லை என்பதை பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலை புரிந்து கொள்ள வேண்டும்.

தமிழகத்தில் இடஒதுக்கீட்டை அமல்படுத்தியதில் மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் பங்கும் முக்கியமானது.

காவிரி பிரச்னையை அரசியலாக்குவது ஏற்புடையதல்ல என்றாா் அவா்.