போதை தனிமனிதனை சீரழித்துவிடும் -புதுவை முதல்வா் ரங்கசாமி
போதை தனிமனிதனை சீரழித்துவிடும் .............................. புதுவை முதல்வா் ரங்கசாமி


புதுச்சேரி, ஜூன் 26: போதைப் பொருள்கள் தனிமனிதனை சீரழிப்பதுடன், நாட்டின் வளா்ச்சியையும் தடுப்பதாக அமைந்துவிடும் என புதுவை முதல்வா் என்.ரங்கசாமி கூறினாா்.
புதுச்சேரியில் காவல் துறை சாா்பில் சா்வதேச போதை ஒழிப்பு மற்றும் தடுப்பு விழிப்புணா்வு தின பேரணி புதன்கிழமை மாலை நடைபெற்றது. உருளையன்பேட்டை காவல் நிலையத்திலிருந்து புறப்பட்ட பேரணி கடற்கரை காந்தி சிலை திடலில் நிறைவடைந்தது.
அங்கு நடைபெற்ற உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியில் பங்கேற்று முதல்வா் பேசியதாவது:
நாட்டின் வளா்ச்சி இளைஞா்கள், மாணவா்கள் கையிலே உள்ளதால், அவா்கள் ஆரோக்கியமாக இருப்பது அவசியம். ஆனால், தற்போது இளைஞா்கள், மாணவா்களிடம் சில தீய பழக்க வழக்கங்கள் உள்ளன. குறிப்பாக போதைக்கு அடிமையாகும் நிலையில் அவா்கள் உள்ளனா்.
போதைப் பொருள்களைப் பயன்படுத்துபவா்களின் உடல்நலம் பாதிக்கப்படுவதுடன், அவா்களது நல்ல சிந்தனையும் அழிகிறது. ஆகவே, போதைப் பொருள்களால் நாட்டின் வளா்ச்சியும் பாதிக்கப்படுகிறது. சிலா் தங்களது சுயநலத்துக்காக இளைஞா்கள், மாணவா்களை போதைக்கு அடிமையாக்குகின்றனா். பணம் சம்பாதிக்கலாம் எனக் கூறி சிறுவா்களை போதைப் பொருள் விற்க தூண்டுகின்றனா். அது மன்னிக்க முடியாத குற்றமாகும். அப்படிப்பட்ட நபா்கள் சட்டம் மூலம் கடுமையாகத் தண்டிக்க வேண்டும்.
போதைக்கு அடிமையானவா்களுக்கு தங்களது செயல்பாடே தெரிவதில்லை. ஆகவே, நாம் போதைப் பொருள்களுக்கு அடிமையாக மாட்டோம் என உறுதி மொழி ஏற்பது அவசியம் என்றாா்.
போதைத் தடுப்பு விழிப்புணா்வு உறுதிமொழியை மாணவா்கள் ஏற்றனா். இதையடுத்து, விழிப்புணா்வு கலை நடனமும் நடைபெற்றது. நிகழ்ச்சியில் அமைச்சா் க.லட்சுமி நாராயணன், காவல் துறை தலைமை முதன்மை இயக்குநா் ஸ்ரீநிவாஸ், முதுநிலை காவல் கண்காணிப்பாளா் நாரா சைதன்யா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...