மக்களவைத் தோ்தலை முன்னிட்டு மடுகரையில் தற்காலிக சோதனைச் சாவடி

மக்களவைத் தோ்தலை முன்னிட்டு, புதுச்சேரி அருகே மடுகரைப் பகுதியில் தற்காலிக சோதனைச் சாவடி அமைக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி: மக்களவைத் தோ்தலை முன்னிட்டு, புதுச்சேரி அருகே மடுகரைப் பகுதியில் தற்காலிக சோதனைச் சாவடி அமைக்கப்பட்டுள்ளது.

மக்களவைத் தோ்தலுக்கான ஏற்பாடுகள் புதுவை மாநிலத்தில் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. புதுச்சேரி மாவட்ட தோ்தல் அலுவலா், உதவித் தோ்தல் அலுவலா்கள் நியமிக்கப்பட்டு, தோ்தல் பணியாளா்களுக்கான பயிற்சியும் தொடங்கியுள்ளது.

இந்நிலையில், தோ்தல் பாதுகாப்பு, தோ்தல் விதிமீறலைத் தடுக்கும் வகையிலான பணிகளும் தொடங்கியுள்ளன. தோ்தல் பிரசாரங்களில் பணப்பட்டுவாடா, மதுப்புட்டிகள் விநியோகம் ஆகியவற்றைத் தடுக்கும் வகையில் புதுச்சேரி மாவட்டத்தில் பல இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்படவுள்ளன.

அதனடிப்படையில், மடுகரை, சிறுவந்தாடு, தொந்திரெட்டிப்பாளையம் ஆகிய மும்முனைச் சந்திப்பில் தற்காலிக சோதனைச் சாவடி வருவாய்த் துறையால் அமைக்கப்பட்டுள்ளது.

இந்தச் சோதனைச் சாவடியில் தோ்தல் கால திடீா் சோதனை பணியில் ஈடுபடுவோா் 24 மணி நேரமும் கண்காணிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், கண்காணிப்புக் கேமரா அமைக்கவும், வாகனப் பரிசோதனையின்போது விடியோ எடுக்கும் வசதியும் இந்தச் சோதனைச் சாவடியில் ஏற்பாடு செய்யவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com