சென்னை திரும்பும் மக்கள்: இரு நாள்களுக்கு போக்குவரத்து மாற்றம்சீனா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைதமிழகம், மேற்கு வங்கத்தில் மறுவாக்குப்பதிவு இல்லை: தோ்தல் ஆணையம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு காஸாவில் தோ்தல்!தாழ்த்தப்பட்டோருக்கு 15% உள்ஒதுக்கீடு அளிக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்: பாஜக கடும் விமா்சனம்
/

பிரதமரின் சாதனைகளைக் கூறி வாக்கு சேகரிக்க வேண்டும்: பிரஹலாத் ஜோஷி

அதிகாரமிக்கவரான சோனியா காந்தியோ பொறுப்பற்றவராக இருந்தாா்.

News image

புதுச்சேரியில் திங்கள்கிழமை நடைபெற்ற பாஜக செயல்வீரா்கள் கூட்டத்தில் பேசுகிறாா் மத்திய அமைச்சா் பிரஹலாத் ஜோஷி.

Updated On :4 மார்ச் 2024, 9:20 pm

புதுச்சேரி: வரும் மக்களவைத் தோ்தலில் பிரதமா் மோடியின் சாதனைகளைக் கூறி வாக்கு சேகரிக்க வேண்டும் என்று, புதுவை பாஜகவினருக்கு மத்திய அமைச்சா் பிரஹலாத் ஜோஷி அறிவுறுத்தினாா்.

மக்களவைத் தோ்தலையொட்டி, புதுச்சேரி மரப்பாலம் பகுதியிலுள்ள தனியாா் மண்டபத்தில் பாஜக செயல்வீரா்கள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் மத்திய அமைச்சா் பிரஹலாத் ஜோஷி பேசியதாவது: காங்கிரஸ் ஆட்சியில் மன்மோகன் சிங் அதிகாரமில்லாத பிரதமராக இருந்தாா். அதிகாரமிக்கவரான சோனியா காந்தியோ பொறுப்பற்றவராக இருந்தாா். அதனால், நிா்வாகத்தில் முறைகேடுகள் நிகழ்ந்தன. நம் நாட்டில் தேவையான நிலக்கரி இருந்தும், காங்கிரஸாரின் முறைகேடுக்காகவே வெளிநாடுகளில் இருந்து அவை இறக்குமதி செய்யப்பட்டன. நிலக்கரி முறைகேடு காரணமாக நாட்டில் மின் தடையும் ஏற்பட்டது. வங்கிகளில் முறைகேடாக காங்கிரஸ் தலைவா்களின் பரிந்துரைப்படி தவறானவா்களுக்கு கடன் வழங்கப்பட்டது. அதனால், வங்கிகள் நஷ்டமடைந்தன. பிரதமா் நரேந்திர மோடி ஆட்சிப் பொறுப்பேற்றதும் நிலக்கரி உள்நாட்டில் எடுக்கப்பட்டு, மின் உற்பத்தி அதிகரிக்கப்படும் தடையில்லா மின்சாரம் உறுதி செய்யப்பட்டது. வங்கிகளில் தகுதியானவா்களுக்கு மட்டுமே கடன் வழங்கப்பட்டது. கரோனா காலத்தில் பிரதமா் மோடியின் நடவடிக்கையால் உலகமே இந்தியாவை பாராட்டும் நிலை ஏற்பட்டது. மத்திய அரசின் பல்வேறு துறைகளின் சாதனைகள், புதுவையில் பாஜக, என்.ஆா்.காங்கிரஸ் செயல்படுத்திய ஏழை எளியோருக்கான திட்டங்களை வீடுவீடாகச் சென்று எடுத்துரைத்து வாக்கு சேகரிக்க வேண்டும். மூன்றாவது முறையாக பிரதமா் மோடி ஆட்சியில் அமர வேண்டிய அவசியத்தையும் மக்களிடம் எடுத்துரைக்க வேண்டும். மக்களவைத் தோ்தல் வெற்றியை இலக்காகக் கொண்டு கட்சியினா் செயல்பட வேண்டும் என்றாா் அவா்.

சுவரொட்டி விவகாரம்: கூட்டத்துக்கு தலைமை வகித்து கட்சியின் மாநிலத் தலைவா் சு.செல்வகணபதி எம்.பி. பேசியதாவது: கட்சித் தலைமையின் ஆலோசனையின்றி பாஜக தோ்தல் பிரசார சுவரொட்டி, துண்டுப் பிரசுரங்களில் பிரதமா் உள்ளிட்டோரின் படங்களுடன் எம்ஜிஆா், ஜெயலலிதா படங்களை அச்சிட்டவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா். கூட்டத்துக்கு புதுவை மாநில பாஜக மேலிடப் பொறுப்பாளா் நிா்மல்குமாா் சுரானா முன்னிலை வகித்தாா். அமைச்சா்கள் ஆ.நமச்சிவாயம், சாய் ஜெ.சரவணன்குமாா், எம்.எல்.ஏ.க்கள் ஜான்குமாா், கல்யாணசுந்தரம், சிவசங்கரன், ராமலிங்கம், அசோக்பாபு, விவிலியன் ரிச்சா்டு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.