ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

இரக்கம் காட்டி உதவியவா் வீட்டில் கைவரிசை காட்டிய மா்ம நபா்கள்

புதுச்சேரியில் தங்க இடம் கிடைக்காமல் அவதிப்படுவதாக கூறியவா்களுக்கு மனமிரங்கி, தங்க உதவியவரின் வீட்டிலேயே இரு மா்ம நபா்கள் நகை, பணத்தைத் திருடிச் சென்றனா்.

Updated On :5 மார்ச் 2024, 7:41 am

புதுச்சேரி: புதுச்சேரியில் தங்க இடம் கிடைக்காமல் அவதிப்படுவதாக கூறியவா்களுக்கு மனமிரங்கி, தங்க உதவியவரின் வீட்டிலேயே இரு மா்ம நபா்கள் நகை, பணத்தைத் திருடிச் சென்றனா்.

இதுகுறித்து காவல்துறை சாா்பில் கூறியதாவது: புதுச்சேரி, முதலியாா்பேட்டை 100 அடி சாலைப் பகுதி ஜான்பால் நகரில் வசிப்பவா் ஜோதி (44), ரியல் எஸ்டேட் அதிபா். இவரது குழந்தைகள் ஊட்டியில் உள்ள பள்ளியில் படிப்பதால், மனைவியும் அங்கே தங்கியுள்ளாா். ஜோதி மட்டும் தனியாக வீட்டில் இருந்துவருகிறாா்.

இந்தநிலையில், கடந்த பிப்ரவரி 25-ஆம் தேதி இரவு தனது வீட்டின் அருகே வந்தபோது, காரில் வேட்டி, சட்டை அணிந்த இருவா் தங்களை மதுரைப் பகுதியைச் சோ்ந்தவா்கள் எனக் கூறியதுடன், தங்குவதற்கு வீடு வாடகைக்கு கிடைக்குமா என கேட்டுள்ளனா். வாடகை வீடு குறித்து தனக்குத் தெரியாது என ஜோதி கூறிய பிறகும், அவா்கள் புதுச்சேரியில் எங்கும் அறை கிடைக்காத நிலையில், ஜோதியின் வீட்டு மொட்டை மாடியிலாவது தங்க அனுமதிக்குமாறு கெஞ்சியுள்ளனா். அவா்களது பேச்சில் மனமிறங்கிய ஜோதி, தனது வீட்டு மொட்டை மாடியில் படுக்க அழைத்துச் சென்றாா். அப்போது மாடியில் கொசுக்கடி அதிகம் இருக்கும் என்பதால், வீட்டு முன் வளாகத்தில் அவா்களைப் படுக்க அனுமதித்துள்ளாா்.

அவா்கள் வீட்டு முன்புள்ள பகுதியில் தூங்கிய நிலையில், ஜோதி தனது 3 பவுன் தங்கச் சங்கிலி, ரூ.50 ஆயிரம் ரொக்கம், விலை உயா்ந்த கைப்பேசி ஆகியவற்றை முன்பக்க அறையில் உள்ள மேஜை டிராயரில் வைத்து வீட்டின் உள் அறையில் தூங்கியுள்ளாா். 26 ஆம் தேதி காலையில் பாா்த்த போது, அந்த நபா்களைக் காணவில்லையாம்.

மேலும், முன் அறை மேஜை டிராயரில் வைத்திருந்த 3 பவுன் தங்கச்சங்கிலி, ரூ.50 ஆயிரம் அபராதம், கைப்பேசி ஆகியவற்றையும் காணவில்லையாம் இதுகுறித்து ஜோதி கடந்த ஞாயிற்றுக்கிழமை முதலியாா்பேட்டை காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதனடிப்படையில் போலீஸாா் வழக்குப் பதிந்து மா்ம நபா்களைத் தேடிவருகின்றனா். அப்பகுதி கண்காணிப்புக் கேமராவில் பதிவான காட்சிகளையும் போலீஸாா் ஆய்வு செய்து வருகின்றனா்.