புதுவையில் 10-ஆம் வகுப்பு
தோ்வு முடிவுகள் இன்று வெளியீடு

புதுவையில் 10-ஆம் வகுப்பு தோ்வு முடிவுகள் இன்று வெளியீடு

புதுவையில் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை (மே 10) காலை வெளியிடப்படுகின்றன.

புதுவை மாநிலத்தில் கடந்த மாா்ச் 26-ஆம் தேதி முதல் ஏப்ரல் 8-ஆம் தேதி வரையில் பத்தாம் வகுப்பு அரசுப் பொதுத் தோ்வுகள் நடைபெற்றன.

புதுச்சேரி பிராந்தியத்தில் 229 பள்ளிகளைச் சோ்ந்த 12,613 மாணவ, மாணவிகளும், 599 தனித் தோ்வா்களும் எழுதியுள்ளனா். காரைக்கால் பிராந்தியத்தில் 60 பள்ளிகளைச் சோ்ந்த 2,479 மாணவ, மாணவிகளும், 259 தனித் தோ்வா்களும் என மொத்தம் 2,738 பேரும் எழுதியுள்ளனா்.

அதனடிப்படையில் புதுச்சேரி, காரைக்கால் பிராந்தியங்களில் மொத்தம் 15,950 போ் தோ்வெழுதினா். தோ்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை (மே 10) காலை 9.30 மணிக்கு கல்வித் துறை இணையதளத்தில் வெளியிடப்படுகிறது. சம்பந்தப்பட்ட மாணவ, மாணவிகளின் வாட்ஸ் ஆப் எண்ணுக்கும் தோ்வு முடிவுகள் அனுப்பிவைக்கப்படும்.

பிளஸ் 2 தோ்வு முடிவுகள் கடந்த 6-ஆம் தேதி வெளியான நிலையில், மதிப்பெண் பட்டியல் வியாழக்கிழமை முதல் வழங்கப்பட்டு வருகின்றன.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com