வாட்ஸ் ஆப் வழியில் ரூ.23.55 லட்சம் மோசடி


புதுச்சேரியைச் சோ்ந்த தொழிலதிபரிடம் மா்ம நபா்கள் நூதன முறையில் ரூ.23.55 லட்சம் மோசடி செய்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
புதுச்சேரி வில்லியனூரைச் சோ்ந்தவா் ராஜா. தொழிலதிபரான இவா், இணையவழியில் பங்குச்சந்தையில் முதலீடு செய்து வந்தாா்.
சில நாள்களுக்கு முன்பு அவரது கைப்பேசி குறுந்தகவலில் இணையவழியில் பங்குச் சந்தையில் முதலீடு செய்து அதிக லாபம் சம்பாதிக்கலாம் எனக் குறிப்பிட்டிருந்தது. இதை நம்பி, வாட்ஸ் ஆப் குழுவில் ராஜா இணைந்தாா். பின்னா், அதன் மூலம் ரூ.23.55 லட்சத்தை முதலீடு செய்தாா்.
அந்தப் பணத்துக்கு லாபம் கிடைத்துள்ளதாக தகவல் வந்தது. ஆனால், அதை அவரால் எடுக்க முடியவில்லை. மேலும், கூடுதல் பணம் செலுத்தினால் மட்டுமே லாபத்தை எடுக்க முடியும் எனவும் குறுந்தகவல் வந்ததாம்.
தான் ஏமாற்றப்பட்டதையறிந்த ராஜா, இதுகுறித்து புதுச்சேரி இணையவழி குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸில் புகாா் அளித்தாா். போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...