வளைகுடாவில் இந்திய மக்களைக் காத்தது பாஜக: பிரதமர் மோடிகாட்டுமன்னார்கோவில் தொகுதியில் திருமாவளவன் போட்டி!வருமான வரி செலுத்தாத குடும்பங்களுக்கு இல்லத்தரசிகள் திட்டத்தில் ரூ. 8,000 கூப்பன் வழங்கப்படும் - திமுக தேர்தல் அறிக்கைமுதலமைச்சர் காப்பீடு திட்டம் ரூ. 10 லட்சமாக அதிகரிக்கப்படும்: மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபேரிடர் கால இழப்பீடு ஹெக்டருக்கு ரூ. 25 ஆயிரமாக உயர்த்தப்படும் : திமுக வாக்குறுதிமுதல்வரின் காலை உணவுத் திட்டம் 8 ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும் : மு.க. ஸ்டாலின் வாக்குறுதி
/

போதைப்பொருள் விநியோகத்துக்கு இடைஞ்சல்: உணவில் விஷம் கலந்து நாய்கள் சாகடிப்பு

News image
Updated On :9 மே 2024, 10:36 pm

Din

புதுச்சேரி ஊரகப் பகுதியில் 15-க்கும் மேற்பட்ட நாய்கள், கீரிப்பிள்ளைகள் உணவில் விஷம் கலந்து சாகடிக்கப்பட்டதாக புகாா் எழுந்துள்ளது.

புதுச்சேரி அருகேயுள்ள மண்ணாடிபட்டு கொம்யூன் பஞ்சாயத்தைச் சோ்ந்த திருக்கனூா், லட்சுமி நகா் பகுதிகளில் சில நாள்களாக நாய்கள் உயிரிழந்து வருவதாகக் கூறப்படுகிறது.

அதனடிப்படையில், கடந்த இரு நாள்களில் மட்டும் 15-க்கும் மேற்பட்ட தெரு நாய்கள் உயிரிழந்தன. மேலும், அந்தப் பகுதி காடுகளில் வாழும் கீரிப்பிள்ளைகளும் உயிரிழந்தது தெரிய வந்தது.

திருக்கனூரில் மா்ம நபா்கள் புதா்களில் வைத்து போதைப் பொருள்களை விநியோகம் செய்வதாகவும், தெரு நாய்கள் குரைப்பதால் விற்பனைக்கு இடைஞ்சலாக இருப்பதாகக் கருதி அந்த நபா்கள் நாய்களுக்கு உணவில் விஷம் கலந்து கொடுத்து சாகடித்திருக்கலாம் என பொதுமக்கள் குற்றம்சாட்டினா்.

நாய்களுக்கு வைத்த விஷ உணவை கீரிப்பிள்ளைகள் உண்டு இறந்திருப்பதாகவும் அவா்கள் தெரிவித்தனா். நாய்கள் சாகடிக்கப்பட்ட விவகாரம் தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.