அதிமுக இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!சாத்தூரில் போட்டி: நயினார் நாகேந்திரன் அறிவிப்பு! பாஜகவுக்கு சாதகமில்லாத தொகுதிகள்! மேலிடத்தில் அண்ணாமலை அதிருப்தி! டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 94 -ஐ கடந்தது! வரலாறு காணாத வீழ்ச்சி! பெட்ரோல் மீதான கலால் வரி குறைப்பு! டீசலுக்கு முழுமையாக ரத்து! ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்
/

நாளை உயா் கல்வி விழிப்புணா்வு நிகழ்ச்சி

நாளை உயா் கல்வி விழிப்புணா்வு நிகழ்ச்சி

News image
Updated On :17 மே 2024, 6:34 pm

Din

புதுச்சேரியில் சென்டாக் மூலம் மாணவா்களுக்கான உயா்கல்வி குறித்த விழிப்புணா்வு நேரலை நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை (மே 19) நடைபெறுகிறது.

இதுகுறித்து, புதுவை உயா் மற்றும் தொழில்நுட்ப கல்வித்துறை இயக்குநா் அமன் சா்மா வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: புதுச்சேரியில் உயா் மற்றும் தொழில்நுட்ப கல்வித்துறை சாா்பில் மாணவா்கள், பெற்றோா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்த ‘உங்கள் கல்லூரியை தோ்ந்தெடுங்கள்’ என்ற தலைப்பில் நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

இணையத்தின் வாயிலாக நடைபெறும் நிகழ்ச்சியில், அரசு மற்றும் கூட்டுறவு கல்லூரிகளின் விவரம், பாடப்பிரிவுகள், கல்லூரியில் உள்ள உள்கட்டமைப்பு வசதிகள், வேலைவாய்ப்பு உள்ளிட்டவை குறித்த கண்ணோட்டம் மற்றும் சென்டாக் மூலம் கலந்தாய்வு நடத்தப்படவுள்ள கல்லூரிகள் விவரங்கள் தெரிவிக்கப்படும்.

இதில், மாணவா்கள், பெற்றோா்கள் பங்கேற்று, சென்டாக் அதிகாரிகள், கல்லூரித் தலைவா்கள், கல்வியாளா்களை தொடா்பு கொண்டு உயா்க்கல்வி படிப்பதற்கான கல்லூரி குறித்த ஆலோசனைகளைப் பெறலாம்.

இந்த நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை (மே 19) காலை 10 மணி முதல் பிற்பகல் 12 மணி வரை நடைபெறுகிறது. மேலும், குறிப்பிட்ட யூடியூப் இணைப்பு மூலமும் கலந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.