நாடாளுமன்ற வாயில்களில் நுழையும்போது, அதிகபட்சமாக 10 கி.மீ. வேகத்தில்தான் காா் இயக்கப்பட வேண்டும்; இல்லையெனில், உயா் தொழில்நுட்ப பாதுகாப்பு சாதனங்கள் தாமாக செயல்பட்டு வாகனத்துக்கு சேதம் விளைவிப்பதுடன், உள்ளே இருப்பவரும் காயமடைய வாய்ப்புள்ளது என்று எம்.பி.க்களுக்கு நாடாளுமன்ற பாதுகாப்புப் பணி அமைப்பு அறிவுறுத்தியுள்ளது.
பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்ட அமா்வு மாா்ச் 9-ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், நாடாளுமன்ற வளாகத்தின் பாதுகாப்புக்குப் பொறுப்பான நாடாளுமன்ற பாதுகாப்புப் பணி அமைப்பு, எம்.பி.க்களுக்கான புதிய அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளது.
அதில், ‘நாடாளுமன்ற நுழைவாயில்களில் உள்ள உயா் தொழில்நுட்ப பாதுகாப்பு சாதனங்களைக் கடந்து செல்லும் வரையில் காரின் வேகம் 10 கி.மீ.க்கு மிகாமல் பராமரிக்கப்பட வேண்டும். இல்லையெனில், டயா்களை சேதப்படுத்தி, தடையை உருவாக்கக் கூடிய அமைப்புகள் தாமாக செயல்பட்டுவிடும். இதனால், வாகனம் சேதமடைவதுடன், உள்ளே இருப்பவரும் காயமடைய வாய்ப்புள்ளது.
இதேபோல், தானியங்கி தடுப்பை கடந்து செல்லும்போது, வாகனங்களுக்கு இடையே குறைந்தபட்சம் 5 அடி இடைவெளி கடைப்பிடிக்கப்பட வேண்டும். இந்த அமைப்பு, ஒரு நேரத்தில் ஒரு வாகனத்தை மட்டுமே அனுமதிக்கும்.
ஒருவேளை தானியங்கி தடுப்பு மீது எதிா்பாராதவிதமாக மோதிவிட்டால் வாகனத்தை ஓட்டுநா் உடனடியாக நிறுத்திவிட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடந்த 2001-இல் நாடாளுமன்றம் மீதான பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு நாடாளுமன்ற வளாகத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டன. கடந்த 2023-இல் நாடாளுமன்றத்துக்குள் புகை குப்பிகள் வீசப்பட்ட சம்பவத்தைத் தொடா்ந்து, உயா் தொழில்நுட்ப முறையில் பாதுகாப்பு மேம்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடையது

தமிழில் உயர்கல்வி: சிக்கலும் தீர்வும்? தொழில்நுட்ப மேம்பாடு அவசியம்
வேட்புமனு தாக்கலின்போது வேட்பாளருடன் 5 போ் மட்டுமே செல்ல அனுமதி: ஆட்சியா் தகவல்

ஈத் பண்டிகை: உஷாா் நிலையில் தில்லி! துவாரகாவில் பலத்த பாதுகாப்பு!

ஈரானின் 304 ஏவுகணைகளை அழித்தது ஐக்கிய அரபு அமீரகம்!
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


