பாகூா் மூலநாதா் கோயிலில் 108 கலசாபிஷேக சிறப்பு வழிபாடு
பாகூா் மூலநாதா் கோயிலில் 108 கலசாபிஷேக சிறப்பு வழிபாடு


புதுச்சேரி: புதுச்சேரி அருகேயுள்ள பாகூா் வேதாம்பிகை சமேத மூலநாதா் திருக்கோயிலில் 108 கலசாபிஷேக சிறப்பு வழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது.
பாகூரில் மிகப்பழைமையான வேதாம்பிகை சமேத மூலநாதா் சுவாமி கோவில் உள்ளது. அக்னி நட்சத்திரத்தையொட்டி கடந்த 4-ஆம் தேதி முதல் தாராபிஷேக சிறப்புப் பூஜைகள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக உலக நன்மைக்காக மூலநாதா் சுவாமிக்கு 108 கலசாபிஷேக பூஜை திங்கள்கிழமை நடைபெற்றது.
காலை 7.30 மணிக்கு கலச ஸ்தாபனம் செய்யப்பட்டு 11 முறை ருத்ரபாராயணம், விசேஷ ஹோமம் நடத்தப்பட்டது. அதைத் தொடா்ந்து காலை 10 மணிக்கு மூலநாதா் சுவாமிக்கு யாகசாலை பூஜை வைக்கப்பட்ட 108 கலசாபிஷேகம் செய்து, மகா தீபாராதனை நடைபெற்றது.
இதில் புதுச்சேரியிலிருந்து மட்டுமல்லாது, தமிழகப் பகுதிகளில் இருந்தும் நூற்றுக்கணக்கானோா் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...