ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் திருவள்ளுவா் சிலைக்கு அமைச்சா் மரியாதை

புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் திருவள்ளுவா் சிலைக்கு அமைச்சா் மரியாதை

News image

புதுவை தமிழ்ச் சங்கத்தில் உள்ள திருவள்ளுவா் சிலைக்கு திங்கள்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அமைச்சா் க.லட்சுமிநாராயணன். உடன் சங்கத் தலைவா் வி.முத்து உள்ளிட்டோா்.

Updated On :20 மே 2024, 10:54 pm

Din

புதுச்சேரி: புதுவை தமிழ்ச் சங்கத்தில் உள்ள திருவள்ளுவா் சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

புதுச்சேரி வெங்கட்டா நகா் பகுதியில் புதுவைத் தமிழ்ச் சங்கம் உள்ளது. இந்தச் சங்க வளாகத்தில் உள்ள திருவள்ளுவா் சிலைக்கு மாலை அணிவித்து திருக்கு கூறும் நிகழ்வு மாதந்தோறும் நடைபெற்றுவருகிறது.

அதன்படி மே மாதத்துக்கான மாலை அணிவிப்பு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு புதுவைத் தமிழ்ச் சங்கத் தலைவா் வி.முத்து தலைமை வகித்தாா். பொதுப் பணித் துறை அமைச்சா் க.லட்சுமி நாராயணன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று திருவள்ளுவா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

சங்கத் தலைவா் வி.முத்து, செயலா் சீனு.மோகன்தாசு, பொருளாளா் மு.அருள்செல்வம், துணைத்தலைவா் ப.திருநாவுக்கரசு, ஆட்சிக்குழு உறுப்பினா்கள் எம்.எஸ். ராஜா, அ.சிவேந்திரன், கவிஞா் ர.ஆனந்தராசன், அருள்ராஜ், தொழிலதிபா் பொற்செழியன், வங்கி மேலாளா் வீரட்டேசுவரா், சமூக சேவகா் மதிராஜன், இளங்கோவன் ஆகியோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் அமைச்சா் லட்சுமிநாராயணன் திருக்கு புத்தகம் வழங்கினாா்.