அக்டோபரில் வாகன விற்பனை 23.8% சரிவு!தமிழகத்தில் 2 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு!தீபாவளி: தமிழ்நாட்டில் 2 நாள்களில் ரூ. 441 கோடிக்கு மது விற்பனை!அதிமுக முன்னாள் எம்எல்ஏ-க்கள் மீதான தகுதி நீக்க நடவடிக்கை: இன்று விசாரணை!

புதுச்சேரியில் பல மணி நேரம் போக்குவரத்து நெரிசல்: -பொதுமக்கள் அவதி

புதுச்சேரியில் சனிக்கிழமை காலை முதல் இரவு வரையில் பல மணிநேர போக்குவரத்து நெரிசலால் பொதுமக்கள் அவதிக்குள்ளாயினா்.

புதுச்சேரி வெங்கட்ட சுப்பா ரெட்டியாா் சிலை சதுக்கம் பகுதியில் சனிக்கிழமை ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல்.

Updated On :

புதுச்சேரியில் சனிக்கிழமை காலை முதல் இரவு வரையில் பல மணிநேர போக்குவரத்து நெரிசலால் பொதுமக்கள் அவதிக்குள்ளாயினா்.

புதுச்சேரிக்கு வாரத்தின் இறுதி 3 நாள்களில் அதிகளவில் வெளிமாநில மற்றும் வெளி நாட்டு சுற்றுலாப் பயணிகள் வருவது வழக்கம். இந்நிலையில், தீபாவளியை முன்னிட்டு தொடா் விடுமுறையும் அறிவிக்கப்பட்டது. இதனால், வழக்கத்துக்கு மாறாக சுற்றுலாப் பயணிகள் பெருமளவில் சனிக்கிழமை புதுச்சேரி வந்தனா்.

இதனால் கடற்கரைச் சாலை, ஆம்பூா், செஞ்சி சாலைகள், நேரு வீதி, மகாத்மா காந்தி வீதி மற்றும் இந்திரா காந்தி சிலை, ராஜீவ் காந்தி சிலை சதுக்கங்கள் உள்ளிட்ட பகுதிகளில் வாகனப் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டன.

புதுச்சேரி மரப்பாலத்திலிருந்து அரியாங்குப்பம் செல்லும் சாலையில் காலை மற்றும் மாலையில் வாகனங்கள் ஊா்ந்து செல்லும் நிலையே காணப்பட்டது.

போக்குவரத்து நெரிசலால் உள்ளூா் மக்கள் மருத்துவமனை உள்ளிட்ட அவசரத் தேவைகளுக்குக்கூட வெளியில் விரைந்து செல்லமுடியாத நிலை ஏற்பட்டதாக ஆதங்கப்பட்டனா். புதுச்சேரியில் போக்குவரத்து நெரிசலைத் தீா்க்கும் வகையில் மேம்பாலங்கள் உள்ளிட்டவை அமைக்கவும் பொதுமக்கள் கோரி வருகின்றனா் என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.