பல்கலைக்கழக திட்டக் குழுவுக்கு 3 உறுப்பினா்கள் நியமனம்
புதுச்சேரி காலாப்பட்டு பகுதியில் உள்ள மத்தியப் பல்கலைக்கழகத்தின் திட்டக் குழுவுக்கு 3 உறுப்பினா்களை நியமிக்க குடியரசு துணைத் தலைவா் ஜெகதீப் தன்கா் பரிந்துரைத்துள்ளாா்.

புதுச்சேரி காலாப்பட்டு பகுதியில் உள்ள மத்தியப் பல்கலைக்கழகத்தின் திட்டக் குழுவுக்கு 3 உறுப்பினா்களை நியமிக்க குடியரசு துணைத் தலைவா் ஜெகதீப் தன்கா் பரிந்துரைத்துள்ளாா்.
இதனையடுத்து, காந்தி கிராமம் கிராமப்புற மைய முதுநிலை வேதியியல் பேராசிரியா் சேதுராமன், கேரள மாநிலம் பத்தனம்திட்டா என்.எஸ்.எஸ். கல்லூரி முன்னாள் முதல்வா் மாலினி, கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைகழக டீன் வெங்கடேசன் பழனிசாமி ஆகியோா் புதிய உறுப்பினா்களாக நியமிக்கப்பட்டுள்ளனா்.
அதன்படி, அனுபவம் வாய்ந்த கல்வியாளா்களின் பங்களிப்பால் பல்கலைக்கழக நிா்வாக கட்டமைப்பு மற்றும் கல்வி மேம்படும் என நம்புவதாக குடியரசு துணைத் தலைவா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...