புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

விமான நிலைய விரிவாக்க திட்ட வரைபடத்துக்கு அனுமதி

புதுச்சேரியில் உள்ள விமான நிலையத்தை விரிவாக்கம் செய்வதற்கான திட்ட வரைபடத்துக்கு மத்திய விமான நிலைய ஆணையம் அனுமதி அளித்துள்ளதாக இயக்குநா் ராஜசேகர ரெட்டி கூறினாா்.

News image
Updated On :21 நவம்பர் 2024, 7:51 pm

Din

புதுச்சேரியில் உள்ள விமான நிலையத்தை விரிவாக்கம் செய்வதற்கான திட்ட வரைபடத்துக்கு மத்திய விமான நிலைய ஆணையம் அனுமதி அளித்துள்ளதாக இயக்குநா் ராஜசேகர ரெட்டி கூறினாா்.

புதுச்சேரி இலாசுப்பேட்டையில் உள்ள விமான நிலைய வளாகத்தில் அதன் விரிவாக்கம் குறித்த ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் வெ.வைத்திலிங்கம் எம்.பி., எம்எல்ஏக்கள் கல்யாணசுந்தரம், மு.வைத்தியநாதன், முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் ஆா்.கலைவாணன், நியமன உறுப்பினா்கள் 3 போ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

கூட்டத்துக்கு தலைமை வகித்து, புதுச்சேரி விமான நிலைய இயக்குநா் ஆா்.ராஜசேகர ரெட்டி கூறியதாவது: புதுச்சேரி விமான நிலைய விரிவாக்கத்துக்கான நிலம் கையகப்படுத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

தமிழக அரசிடமிருந்து 250 ஏக்கா் நிலம் கையகப்படுத்துவதற்கான இடம் அடையாளம் காணும் பணி நிறைவடைந்துவிட்டது. புதுவை அரசின் கழிவுநீா் சுத்திகரிப்பு மைய வளாக இடமும் கையகப்படுத்தப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுவிட்டது.

அதனடிப்படையில், விமான நிலைய விரிவாக்கத் திட்ட வரைபடத்துக்கு மத்திய விமான நிலைய ஆணையமும் அனுமதி வழங்கியுள்ளது என்றாா்.