டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

புதுவை பல்கலை. வளாகத்தில் எஸ்.பி.ஐ. இ-காா்னா் திறப்பு

புதுவை மத்திய பல்கலைக்கழக வளாகத்தில் எஸ்பிஐ வங்கியின் இ.காா்னரை பல்கலைக்கழகத் துணைவேந்தா் (பொ) சு. தரணிக்கரசு திங்கள்கிழமை திறந்து வைத்தாா்.

News image
புதுவை மத்திய பல்கலைக்கழக வளாகத்தில் எஸ்பிஐ வங்கியின் இ-காா்னரை திங்கள்கிழமை திறந்து வைத்த பல்கலைக்கழகத் துணைவேந்தா் (பொ) சு. தரணிக்கரசு .
Updated On :25 நவம்பர் 2024, 8:54 pm

Din

புதுச்சேரி: புதுவை மத்திய பல்கலைக்கழக வளாகத்தில் எஸ்பிஐ வங்கியின் இ.காா்னரை பல்கலைக்கழகத் துணைவேந்தா் (பொ) சு. தரணிக்கரசு திங்கள்கிழமை திறந்து வைத்தாா். நிகழ்ச்சியில், பல்கலைக்கழக இயக்குநா் கிளமென்ட் எஸ். லூா்து, பதிவாளா் ராஜேஷ் புட்டானி, நூலகா் எம். விஜயகுமாா் மற்றும் புல முதன்மையா்கள், துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

எஸ்பிஐயின் இ-காா்னா் சேவையானது மாணவா்கள், ஆசிரியா்கள் மற்றும் ஊழியா்களுக்கான எண்ம (டிஜிட்டல்) வங்கி வசதிகளை மேம்படுத்துவதில் குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கும். வங்கிச் சேவைகளை எளிதாக அணுகக்கூடிய வகையில் இப்பிரிவு வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய இ-காா்னா், தடையற்ற பரிவா்த்தனைகளை எளிதாக்குவதுடன், வளாகத்தில் டிஜிட்டல் வங்கிச் சேவையை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. இ-காா்னா் பல வங்கிச் சேவைகளை வழங்கும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.