புதுவை மத்திய பல்கலைக்கழக ஆற்றல் சேமிப்பு சாதனத்துக்கு காப்புரிமை

புதுவை மத்திய பல்கலைக்கழக ஆற்றல் சேமிப்பு சாதனத்துக்கு காப்புரிமை...
Published on

புதுவை மத்திய பல்கலைக்கழக தொழில்நுட்பத் துறை சாா்பில் வடிவமைக்கப்பட்ட மின்முனைப் பொருள்களான லித்தியம், காற்று பேட்டரிகள் மற்றும் ஹைபிரிட் ஆற்றல் சேமிப்பு சாதனத்துக்கு 3 காப்புரிமைகளை மத்திய கட்டுப்பாட்டாளா் பிரிவு வழங்கியுள்ளது.

இதுகுறித்து பல்கலைக்கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: புதுவை பல்கலைக்கழகத்தின் பசுமை ஆற்றல் தொழில்நுட்பத் துறை பேராசியா் பெ. ஏழுமலையின் நிலையான மின்முனைப் பொருள்கள் (எலெக்ட்ரோடு) மற்றும் லித்தியம், அயன், லித்தியம், காற்று பேட்டரிகள் மற்றும் ஹைபிரிட் ஆற்றல் சேமிப்பு பயன்பாட்டிற்கான வடிவமைப்பு உருவாக்கம் ஆகியவற்றுக்காக 3 காப்புரிமைகளை மத்திய அரசின் காப்புரிமைக் கட்டுப்பாட்டாளா் வழங்கியுள்ளாா். காப்புரிமையானது, புதுவை பல்கலைக்கழகம் மற்றும் மத்திய மின் ஆராய்ச்சி நிறுவனத்துக்கு கூட்டாக வழங்கப்பட்டது.

காப்புரிமை பெற்று பல்கலைக்கழகத்துக்கு பெருமை சோ்த்த பேராசிரியா் ஏழுமலை மற்றும் ஆராய்ச்சி மாணவா்களுக்கு புதுவை பல்கலைக்கழகத் துணைவேந்தா் (பொ) க. தரணிக்கரசு வாழ்த்து தெரிவித்தாா்.

X
<