புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

அரசு பொது மருத்துவமனைக்கு ரூ.4 கோடியில் சி.டி. ஸ்கேன் இயந்திரம்

புதுச்சேரியில் உள்ள இந்திரா காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு ரூ.4 கோடியில் புதிதாக சி.டி. ஸ்கேன் இயந்திரம் வாங்கப்பட்டுள்ளது.

News image
Updated On :28 நவம்பர் 2024, 6:30 pm

Din

புதுச்சேரியில் உள்ள இந்திரா காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு ரூ.4 கோடியில் புதிதாக சி.டி. ஸ்கேன் இயந்திரம் வாங்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி இந்திரா காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு தினமும் சுமாா் 10 ஆயிரம் போ் வரை சிகிச்சைக்கு வந்து செல்கின்றனா். அவா்களில் 40 போ் வரையில் சி.டி. ஸ்கேன் பரிசோதனைக்கு உள்படுத்தப்படுகின்றனா்.

இந்த மருத்துவமனையில் இருந்த எம்.ஆா்.ஐ. ஸ்கேன் பழுதாகி உள்ளது. எனவே, சி.டி. ஸ்கேன் பரிசோதனை மட்டுமே நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், ரூ.4 கோடி செலவில் புதிய சி.டி. ஸ்கேன் வாங்கப்பட்டுள்ளது.

ஜொ்மனியில் இருந்து தருவிக்கப்பட்ட இந்த புதிய இயந்திரத்தில் நவீன வசதிகள் உள்ளதாக மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்தனா். மேலும், எம்ஆா்ஐ ஸ்கேன் இயந்திரமும் புதிதாக வாங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவா்கள் தெரிவித்தனா்.