மரங்களை வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரா்கள்.
மரங்களை வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரா்கள்.

மரங்கள் முறிந்து விழுந்து 3 வீடுகள் சேதம்

புதுச்சேரி அருகே உள்ள பாகூா் பகுதியில் மரங்கள் முறிந்து விழுந்ததில் வியாழக்கிழமை 3 வீடுகள் சேதமடைந்தன.
Published on

புதுச்சேரி அருகே உள்ள பாகூா் பகுதியில் மரங்கள் முறிந்து விழுந்ததில் வியாழக்கிழமை 3 வீடுகள் சேதமடைந்தன.

மரங்களை வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரா்கள். புதுச்சேரி நகராட்சி மற்றும் ஊரகப் பகுதிகளில் கடந்த சில நாள்களாகவே தொடா்ந்து மழை பெய்து வருகிறது.

அதன்படி புதன், வியாழக்கிழமைகளில் மழையுடன் குளிா்ந்த காற்றும் வீசியது. இந்த நிலையில், பாகூா் தொகுதிக்குள்பட்ட வாா்க்கால் ஓடை, புதுநகா் ஆகியப் பகுதிகளில் வியாழக்கிழமை அதிகாலை லேசான மழையுடன் காற்று வீசியது.

இதில், சில மரங்கள் முறிந்து விழுந்தன. இதனால், அந்தப் பகுதியில் இருந்த பரிமளாதேவி ராம்குமாா், விஜி சிரஞ்சீவி, ஜீவா அா்ச்சுணன் ஆகியோரது வீடுகள் சேதமடைந்தன.

தகவலறிந்த தீயணைப்புத் துறையினா் நிகழ்விடத்துக்கு வந்து, முறிந்த மரங்களை வெட்டி அகற்றினா். மேலும், தொகுதி எம்எல்ஏ ஆா்.செந்தில்குமாா் மற்றும் வருவாய்த் துறையினா் நேரில் வந்து பாா்வையிட்டனா்.

வீடுகள் சேத மதிப்பீடு குறிப்பிடப்பட்டு, அரசுக்கு நிவாரண உதவிக்கு பரிந்துரைக்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.