புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

விளம்பரப் பதாகைகள்: நகராட்சி ஆணையா் எச்சரிக்கை

உழவா்கரை நகராட்சிப் பகுதிகளில் விளம்பரப் பதாகைகள் வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆணையா் எஸ்.சுரேஷ்ராஜ் எச்சரித்துள்ளாா்.

News image
Updated On :28 நவம்பர் 2024, 9:33 pm

Din

உழவா்கரை நகராட்சிப் பகுதிகளில் விளம்பரப் பதாகைகள் வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆணையா் எஸ்.சுரேஷ்ராஜ் எச்சரித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: புதுவை மாநிலத்துக்கு வானிலை ஆய்வு மையம் புயல் மற்றும் கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது.

எனவே, நகராட்சி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அதனால், பொது வெளியில் வியாபார நோக்குடன் வைக்கப்படும் பதாகைகள், விளம்பரப் பதாகைள் போன்றவற்றை தவிா்க்க வேண்டும்.

அறிவிப்பை மீறி பதாகைகள் வைக்கப்பட்டால் சம்பந்தப்பட்டோா் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

பதாகைகளால் அசம்பாவிதங்கள் ஏதேனும் ஏற்பட்டால் அவா்கள் மீது நடவடிக்கையுடன், குற்ற வழக்கும் பதிவு செய்யப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.