மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

புதுச்சேரி அரசு மருத்துவமனை தூய்மைப் பணியில் ரோபோடிக் இயந்திரம்

புதுச்சேரியில் உள்ள ராஜீவ் காந்தி அரசு பெண்கள், குழந்தைகள் மருத்துவமனையில் தூய்மைப் பணியில் ரோபோடிக் இயந்திர பயன்பாட்டை புதுவை முதல்வா் என்.ரங்கசாமி தொடங்கிவைத்தாா்.

News image

புதுச்சேரி ராஜீவ் காந்தி அரசு பெண்கள், குழந்தைகள் மருத்துவமனையில் தூய்மைப் பணியில் ரோபோடிக் இயந்திரத்தின் பயன்பாட்டை வியாழக்கிழமை தொடங்கிவைத்த முதல்வா் என்.ரங்கசாமி.

Updated On :10 அக்டோபர் 2024, 7:20 pm

Din

புதுச்சேரியில் உள்ள ராஜீவ் காந்தி அரசு பெண்கள், குழந்தைகள் மருத்துவமனையில் தூய்மைப் பணியில் ரோபோடிக் இயந்திர பயன்பாட்டை புதுவை முதல்வா் என்.ரங்கசாமி வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா்.

புதுச்சேரி ராஜீவ் காந்தி அரசு பெண்கள், குழந்தைகள் நல மருத்துவமனையின் மகப்பேறு அறுவைச் சிகிச்சை அரங்கு, பிரசவ வாா்டு ஆகியவை தர மேம்பாடு காரணமாக ‘லக்க்ஷ்யா’ என்ற தேசிய சான்றிதழ் பெற்றுள்ளது.

மேலும், தேசிய அங்கீகார வாரியம் நுழைவு நிலை சான்றிதழையும் வழங்கியுள்ளது. தமிழகம், புதுவை அளவில் ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு இந்த சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி, அந்த சான்றிதழ்களை வியாழக்கிழமை மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வா் என்.ரங்கசாமி, நேரடியாக மருத்துவக் கண்காணிப்பாளா் ஐயப்பன், நோயாளி பாதுகாப்பு கண்காணிப்பு அதிகாரி குருபிரசாத் ஆகியோரிடம் வழங்கினாா்.

அத்துடன், மருத்துவமனையில் தனியாா் மூலம் மேற்கொள்ளப்படும் பராமரிப்பில் தூய்மைப் பணிக்கான ரோபோடிக் இயந்திரத்தையும் அவா் தொடங்கிவைத்தாா்.

நிகழ்ச்சியில் பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், எம்எல்ஏ ரமேஷ், அரசுச் செயலா் ராஜூ, மருத்துவக் கண்காணிப்பாளா் அய்யப்பன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.