இலவச அரிசி விநியோகத் திட்டம்: புதுவை ஆளுநருக்கு அதிமுக கோரிக்கை
புதுவை மாநிலத்தில் இலவச அரிசி விநியோகத் திட்டச் செயல்பாடு குறித்து மக்களுக்கு துணைநிலை ஆளுநா் விளக்க வேண்டும் என அதிமுக மாநிலச் செயலா் ஆ.அன்பழகன் வலியுறுத்தினாா்.


புதுவை மாநிலத்தில் இலவச அரிசி விநியோகத் திட்டச் செயல்பாடு குறித்து மக்களுக்கு துணைநிலை ஆளுநா் விளக்க வேண்டும் என அதிமுக மாநிலச் செயலா் ஆ.அன்பழகன் வலியுறுத்தினாா்.
இதுகுறித்து அவா் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியது: புதுவை மாநிலத்தில் தீபாவளிக்காக அனைத்து குடும்ப அட்டைதாரா்களுக்கும் 10 கிலோ இலவச அரிசி, 2 கிலோ சா்க்கரை கூட்டுறவு நிறுவனமான கான்பெட் மூலம் வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
தற்போது வழங்கப்படும் இலவச அரிசிக்கான பணம் போதுமானதாக இல்லை. ஆகவே, பணத்துக்குப் பதிலாக இலவச அரிசியை நியாயவிலைக் கடைகள் மூலம் விநியோகிக்க வேண்டும் என மக்கள் கோரி வருகின்றனா்.
இலவச அரிசி வழங்கப்படும் என கடந்த 3 ஆண்டுகளாக புதுவை அமைச்சா்கள் உள்ளிட்டோரும் கூறிவருகின்றனா். ஆனால், இதுவரை இலவச அரிசி விநியோகிக்கப்படவில்லை. அதனால் மக்கள் ஏமாற்றமடைந்துள்ளனா்.
அதே நேரத்தில் இலவச அரிசித் திட்டத்தில் புதுவை அரசின் கொள்கை முடிவு என்ன என்பதை துணைநிலை ஆளுநா் மக்களுக்கு விளக்க வேண்டும். மழைநீரை அப்புறப்படுத்த தேவையான நடவடிக்கை அவசியம். காய்ச்சல் பாதிப்பை தடுக்கவேண்டும். அரசு மருத்துவமனை உள்கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும் என்றாா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...