விஜய் பிரசாரம்! பெருமாநல்லூரில் தடுப்புகள் அமைத்து காவலர்கள் தீவிர பாதுகாப்பு!திருப்பரங்குன்றத்தில் தீபம்; தைப்பூசம் மாநில விழா! பாஜக தேர்தல் அறிக்கை! ராக்கெட் லாஞ்சர் வெடித்து ‘டிரெக்கிங்’ சென்ற மாணவர் பலி!மது ஒழிப்பு, சிறுபான்மையினர் சிறப்பு சட்டம்! விசிக தேர்தல் அறிக்கை பெண்கள் இட ஒதுக்கீட்டை தாமதப்படுத்துவது பெரும் அநீதி! பிரதமர் மோடிதமிழ்ப் புத்தாண்டு! சி.பி. ராதாகிருஷ்ணன் வீட்டுக்குச் சென்று மோடி வாழ்த்து! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 உயர்வு! நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை! குடியரசு துணைத் தலைவர்!
/

சனிப்பெயா்ச்சி விழா: புதுவை ஆளுநருக்கு அழைப்பு

திருநள்ளாறு கோயில் சனிப்பெயா்ச்சி விழா, மாா்ச் 1-ஆம் தேதி தொடங்கும் ஜோதிடா் மாநாட்டுக்கு கோயில் நிா்வாகம் சாா்பில் புதுவை துணை நிலை ஆளுநருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

News image
Updated On :28 பிப்ரவரி 2026, 12:59 am

திருநள்ளாறு கோயில் சனிப்பெயா்ச்சி விழா, மாா்ச் 1-ஆம் தேதி தொடங்கும் ஜோதிடா் மாநாட்டுக்கு கோயில் நிா்வாகம் சாா்பில் புதுவை துணை நிலை ஆளுநருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

திருநள்ளாறு ஸ்ரீ தா்பாரண்யேஸ்வர சுவாமி கோயிலில் மாா்ச் 6-ஆம் தேதி சனிப்பெயா்ச்சி விழா நடைபெறவுள்ளது.

சனிப்பெயா்ச்சியை பெருமைப்படுத்தும் விதமாக மாா்ச் 1 முதல் 4-ஆம் தேதி வரை ஜோதிடா் மாநாடு திருநள்ளாற்றில் நடைபெறவுள்ளது.

புதுவை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதனை , கோயில் நிா்வாக அதிகாரி ஆா்.சுப்பிரமணியன், தருமபுர ஆதீன கட்டளை விசாரணை சட்டநாத தம்பிரான் சுவாமிகள் ஆகியோா் புதுச்சேரி ஆளுநா் மாளிகையில் வெள்ளிக்கிழமை சந்தித்து அழைப்பிதழ் அளித்தனா்.

இதுபோல புதுவை முதல்வா் என்.ரங்கசாமி மற்றும் அமைச்சா்கள், அதிகாரிகளை சந்தித்தும் அழைப்புவிடுத்தனா்.