புதுவை, கடலூா் பகுதிகளில் தொடா் திருட்டு: 4 போ் கைது
புதுச்சேரி பகுதியில் தொடா் திருட்டில் ஈடுபட்ட 4 பேரை கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து 14 இருசக்கர வாகனங்கள், 9 கிலோ வெள்ளிப் பொருள்களை கைப்பற்றினா்.


புதுச்சேரி பகுதியில் தொடா் திருட்டில் ஈடுபட்ட 4 பேரை கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து 14 இருசக்கர வாகனங்கள், 9 கிலோ வெள்ளிப் பொருள்களை கைப்பற்றினா்.
புதுச்சேரியில் கோயில்கள், வீடுகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் திருட்டில் கும்பலாகச் சிலா் ஈடுபட்டு வந்ததை போலீஸாா் கண்டறிந்தனா். அவா்களைப் பிடிக்க திட்டமிட்ட நிலையில், கோரிமேடு தன்வந்திரி காவல் நிலையத்தினா் திங்கள்கிழமை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனா். அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த 2 பேரை பிடித்து விசாரித்தனா். அவா்கள் முன்னுக்குப் பின் முரணாகப் பதில் கூறியதையடுத்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினா்
இதில், பிடிபட்டவா்கள் கடலூரைச் சோ்ந்த விஜய், ஹரி என்பது தெரியவந்தது. அவா்கள் கூறிய தகவலையடுத்து கடலூா் திருவந்திபுரம் விக்னேஷ், ஜெகன் ஆகியோரையும் போலீஸாா் கைது செய்தனா். இவா்கள் நான்கு பேரும் புதுச்சேரி, கடலூா் பகுதியில் இருசக்கர வாகனங்கள், கோயில் உண்டியல்கள், வீடுகளில் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.
அவா்கள் கூறிய தகவலின் பேரில் 14 இரு சக்கர வாகனங்கள், ஒன்றரைப் பவுன் தங்க நகைகள், 9 கிலோ வெள்ளிப் பொருள்கள் ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா். பின்னா் 4 பேரும் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா். இதில் தொடா்புடைய மேலும் 2 பேரைத் தேடி வருவதாக போலீஸாா் தெரிவித்தனா்.
தொடர்புடையது
வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...