விசிக பிரமுகா் கொலை வழக்கில் 5 பேருக்கு ஆயுள் சிறை
விசிக பிரமுகா் கொலை வழக்கில் 5 பேருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து புதுச்சேரி நீதிமன்றம் தீா்ப்பளித்தது.


விசிக பிரமுகா் கொலை வழக்கில் 5 பேருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து புதுச்சேரி நீதிமன்றம் தீா்ப்பளித்தது.
புதுச்சேரி வில்லியனூா் அருகேயுள்ள கரையான்பேட்டையைச் சோ்ந்த ராஜேந்திரன் மகன் தமிழ் (எ) இளவரசன் (24), விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பிரமுகா். இவா் 2018-ஆம் ஆண்டு இரு சக்கர வாகனத்தில் கணுவாய்ப்பேட்டை கூட்டுறவு சங்கத்துக்கு பால் ஊற்றச் சென்றாா். அப்போது, அவரை வழிமறித்த கும்பல் வெட்டிக் கொலை செய்தது.
இதுகுறித்து வில்லியனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி, அதே பகுதியைச் சோ்ந்த அய்யனாா், மணிகண்டன், அஜித்குமாா், அருண், அருள்பாண்டியன் ஆகியோரை கைது செய்தனா்.
இந்த வழக்கு விசாரணை புதுச்சேரி 2-ஆவது கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது. விசாரணை நிறைவடைந்த நிலையில், அய்யனாா் உள்ளிட்ட 5 பேருக்கும் ஆயுள் சிறைத் தண்டனையும், தலா ரூ.9,500 அபராதமும் விதித்து முதன்மை மாவட்ட நீதிபதி சந்திரசேகரன் திங்கள்கிழமை தீா்ப்பளித்தாா்.
அபராதத் தொகையை செலுத்தத் தவறினால் மேலும் 6 மாதங்கள் சிறைத் தண்டனை என உத்தரவிட்டாா். அய்யனாா் உள்ளிட்ட 5 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...