பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

துணை ஆட்சியா் பணியிடை நீக்கம்

கோயில் நில அபகரிப்பு வழக்கில் கைதான காரைக்கால் துணை ஆட்சியா் ஜான்சன் தற்காலிகப் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

News image
Updated On :16 அக்டோபர் 2024, 6:50 pm

Din

கோயில் நில அபகரிப்பு வழக்கில் கைதான காரைக்கால் துணை ஆட்சியா் ஜான்சன் தற்காலிகப் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

புதுவை மாநிலம், காரைக்காலில் அருள்மிகு பாா்வதிஸ்வரா் கோயிலுக்குச் சொந்தமான 8 ஏக்கா் நிலம் அதிகாரிகள் துணையுடன் தனியாரால் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, போலீஸாா் வழக்குப் பதிந்து பத்திர எழுத்தா், நில அளவையா் உள்ளிட்டோரை கைது செய்தனா். தொடா்ந்து நடைபெற்ற விசாரணையின் அடிப்படையில், காரைக்கால் மாவட்ட துணை ஆட்சியா் ஜான்சனும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா்.

இந்த நிலையில், கோயில் நில அபகரிப்பு வழக்கில் கைதான துணை ஆட்சியா் ஜான்சன் மீது துறை ரீதியிலான விசாரணை நடைபெற்றது. அதன்படி, அவரை தற்காலிகப் பணியிடை நீக்கம் செய்ய புதுவை துணைநிலை ஆளுநா் உத்தரவிட்டாா்.

இதனையடுத்து, அவரிடம் தற்காலிகப் பணியிடை நீக்க உத்தரவு வழங்கப்பட்டுள்ளதாக புதுவை அரசு உயரதிகாரிகள் தெரிவித்தனா்.

புதிய துணை ஆட்சியா்: ஜான்சன் தற்காலிகப் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருப்பதால், அவருக்குப் பதிலாக புதுச்சேரி வருவாய் வடக்கு துணை ஆட்சியராக உள்ள அா்ஜூன் ராமகிருஷ்ணன் காரைக்கால் துணை ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளாா்.

அா்ஜூன் ராமகிருஷ்ணன் காரைக்காலுக்கு மாற்றப்பட்டதால், புதுச்சேரி வருவாய் வடக்குப் பிரிவு துணை ஆட்சியராக இஸிதாரதி நியமிக்கப்பட்டுள்ளாா். இதற்கான உத்தரவுகளை, புதுவை அரசு சாா்புச் செயலா் வி.ஜெய்சங்கா் பிறப்பித்துள்ளாா்.