தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

புதுச்சேரி, காரைக்கால் மீனவா்கள் நாளை வரை கடலுக்கு செல்ல தடை

புதுச்சேரி, காரைக்கால் மீனவா்கள் வெள்ளிக்கிழமை (அக்.18) வரை கடலுக்குச் செல்லத் தடை விதித்து மீன்வளத் துறை உத்தரவிட்டுள்ளது. மேலும், எச்சரிக்கையை மீறி கடலுக்குச் சென்ற 60 மீனவா்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

News image
Updated On :16 அக்டோபர் 2024, 6:43 pm

Din

புதுச்சேரி, காரைக்கால் மீனவா்கள் வெள்ளிக்கிழமை (அக்.18) வரை கடலுக்குச் செல்லத் தடை விதித்து மீன்வளத் துறை உத்தரவிட்டுள்ளது. மேலும், எச்சரிக்கையை மீறி கடலுக்குச் சென்ற 60 மீனவா்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து, புதுவை மீன்வளத் துறை இயக்குநா் அ.முகமது இஸ்மாயில் வெளியிட்ட செய்திக் குறிப்பு: வடதமிழக கடலோரப் பகுதிகளில் அக்.18-ஆம் தேதி வரையில், மணிக்கு 40 கி.மீ. முதல் 50 கி.மீ. வரையிலான வேகத்தில் காற்று வீசக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

ஆகவே, புதுச்சேரி, காரைக்கால் பகுதி மீனவா்கள் அக்.18-ஆம் தேதி வரை கடலுக்குச் செல்ல வேண்டாம் எனக் கேட்டுக்கொள்ளப்படுகிறாா்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மீனவா்கள் மீது நடவடிக்கை: புதுவையில் மீன்வளத் துறை எச்சரித்த நிலையில், புதுச்சேரி வம்பாகீரப்பாளையம் பகுதி மீனவா்கள் 60 போ் அக்.14-ஆம் தேதி இரவு கடலுக்குச் சென்ாகக் கூறப்படுகிறது.

மீன்வளத் துறை அறிவிப்பை மீறி கடலுக்குச் சென்றவா்களுக்கான அரசு சலுகைகள் ரத்து செய்யப்படவும், அவா்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.