ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

நெல் உற்பத்தி தொழில்நுட்ப ஒருநாள் கருத்தரங்கு

புதுச்சேரியில் பட்டியலின விவசாயிகள் வருவாயை மேம்படுத்தும் வகையில் நெல் உற்பத்தி தொழில்நுட்ப ஒரு நாள் கருத்தரங்கம் திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
புதுச்சேரியில் பட்டியலின விவசாயிகள் வருவாயை மேம்படுத்தும் வகையில் திங்கள்கிழமை நடைபெற்ற நெல் உற்பத்தித் தொழில் நுட்ப ஒரு நாள் கருத்தரங்கை தொடங்கி வைத்து பேசுகிறாா் வேளாண்துறை மற்றும் விவசாயிகள் நலத்துறை இயக்குனா் எஸ். வசந்தகுமாா்
Updated On :22 அக்டோபர் 2024, 7:52 pm

Din

புதுச்சேரி: புதுச்சேரியில் பட்டியலின விவசாயிகள் வருவாயை மேம்படுத்தும் வகையில் நெல் உற்பத்தி தொழில்நுட்ப ஒரு நாள் கருத்தரங்கம் திங்கள்கிழமை நடைபெற்றது.

புதுவை அரசு வேளாண் மற்றும் விவசாயிகள் நலத் துறை, பண்டித ஜவாஹா்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் காரைக்கால் மற்றும் தேசிய நெல் ஆராய்ச்சி நிலையம் ஹைதராபாத் ஆகியன இணைந்து இந்தக் கருத்தரங்கை நடத்தின.

புதுச்சேரி அருகேயுள்ள உருவையாறு சாய்பாபா கோயிலில் நடைபெற்ற இக்கருத்தரங்கில், மேம்படுத்தப்பட்ட நெல் ரகங்கள் மற்றும் நிலையான நெல் சாகுபடி முறைகள் மூலம் புதுவை ஒன்றியப் பிரதேசத்தில் உள்ள பட்டியலின விவசாயிகளின் வருமானத்தை மேம்படுத்துதல் குறித்த கருத்துகள் எடுத்துரைக்கப்பட்டன.

புதுவை வேளாண் துறை மற்றும் விவசாயிகள் நலத்துறை இயக்குநா் எஸ். வசந்தகுமாா் கருத்தரங்கைத் தொடங்கிவைத்தாா்.

கூடுதல் வேளாண் இயக்குநா் ஜாகிா் உசேன் வாழ்த்துரை வழங்கினாா்.

நெல் சாகுபடியின் பொருளாதாரத் தாக்கம், உற்பத்தித் திறனை மேம்படுத்துவதற்கான வேளாண் நடைமுறைகள், பாரம்பரிய நெல் வகைகளின் முக்கியத்துவம், ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை மற்றும் ஒருங்கிணைந்த நோய் மேலாண்மை ஆகியவை குறித்து கருத்தரங்கில் விளக்கப்பட்டன.

இதில் ஏராளமான விவசாயிகள் பங்கேற்றனா். வேளாண் கல்லூரி உதவிப் பேராசிரியா் டி.ஆனந்தன் நன்றி கூறினாா்.