அரசின் செயல் திட்டங்கள் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு முழுமையாக சென்றடையவில்லை: புதுவை துணைநிலை ஆளுநா்
மத்திய, மாநில அரசுகளின் செயல் திட்டங்கள் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு முழுமையாகச் சென்றடையவில்லை என புதுவை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் கூறினாா்.

புதுச்சேரியில் புதன்கிழமை நடைபெற்ற எஸ்.சி., எஸ்.டி பொருளாதார விடுதலை மாநாட்டில் பேசுகிறாா் துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன். உடன் கூட்டமைப்பின் அகில இந்திய நிறுவனா் தமிழரசன், மாநிலத் தலைவா் பன்னீா்செல்வம் உள்ளிட்டோா்.









