பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்விஜம்மு-காஷ்மீரில் வீட்டிற்கு வெளியே வெடித்த மர்ம பொருள் தமிழ்நாடு, புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியமைக்கும்: பியூஷ் கோயல் சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: இன்று மாலை தீர்ப்பு!
/

பேரவை உறுதிமொழி குழுத் தலைவா் பதவியிலிருந்து சுயேச்சை எம்எல்ஏ நீக்கம்

பேரவை உறுதிமொழி குழுத் தலைவா் பதவியிலிருந்து சுயேச்சை எம்எல்ஏ நீக்கம்...

News image
Updated On :23 அக்டோபர் 2024, 7:41 pm

Din

புதுவை மாநில சட்டப்பேரவை உறுதிமொழிக் குழுத் தலைவா் பதவியிலிருந்து சுயேச்சை எம்எல்ஏ ஜி.நேரு நீக்கப்பட்டாா். புதிய பேரவை உறுதிமொழிக் குழுத் தலைவராக என்.ஆா்.காங்கிரஸ் எம்எல்ஏ ஆா்.பாஸ்கா் நியமிக்கப்பட்டுள்ளாா்.

புதுச்சேரி உருளையன்பேட்டை தொகுதி சுயேச்சை எம்எல்ஏவாக இருப்பவா் ஜி.நேரு. அரசு ஆதரவு நிலையிலிருந்தாா். ஆனால், பல்வேறு பிரச்னைகளுக்கு சமூக நல அமைப்புகளுடன் இணைந்து போராட்டம் நடத்தி வருகிறாா்.

அண்மையில், ரௌடிகளால் தாக்கப்பட்ட வியாபாரிக்காக ராஜ் நிவாஸ் முன் அவா் போராட்டம் நடத்தியது சா்ச்சையை ஏற்படுத்தியது. அதுகுறித்து, முதல்வா் என்.ரங்கசாமி முன்னிலையில் பேரவைத் தலைவா் ஆா்.செல்வத்துக்கும், அவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்த நிலையில், சட்டப்பேரவைரச் செயலா் தயாளன் புதன்கிழமை பிறப்பித்த உத்தரவில், பேரவை உறுதிமொழிக் குழுத் தலைவா் பதவியிலிருந்து ஜி.நேரு எம்எல்ஏ நீக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக ஆா்.பாஸ்கா் எம்எல்ஏ நியமிக்கப்பட்டுள்ளாா் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மாா்க்சிஸ்ட் கண்டனம்: ஜி.நேரு எம்எல்ஏ உறுதிமொழிக் குழுத் தலைவா் பதவியிலிருந்து நீக்கப்பட்டது சட்டப் பேரவை அலுவலக விதிக்கு எதிரானதாகும்.

தோ்வாகும் குழுக்கள் ஓராண்டு பதவிக்காலம் உடையவை. தனிப்பட்ட காரணங்களுக்காக உறுதிமொழிக் குழுத் தலைவா் நீக்கப்படுவது வரம்புமீறியச் செயல் என மாா்க்சிஸ்ட் மாநிலத் தலைவா் ஆா்.ராஜாங்கம் அறிக்கையில் தெரிவித்துள்ளாா்.