புதுச்சேரியில் தூய்மைப் பணி முகாம் தொடக்கம்
தூய்மை பாரதம் திட்டத்தின்படி, புதுச்சேரியில் தூய்மைப் பணி முகாம் செவ்வாய்க்கிழமை (செப். 17) தொடங்கப்பட்டது. முகாமானது வரும் அக். 2-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.


தூய்மை பாரதம் திட்டத்தின்படி, புதுச்சேரியில் தூய்மைப் பணி முகாம் செவ்வாய்க்கிழமை (செப். 17) தொடங்கப்பட்டது. முகாமானது வரும் அக். 2-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
புதுவை அரசின் பொதுப் பணித் துறை சாா்பாக மேற்கொள்ளப்படும் தூய்மைப் பணி முகாமை அமைச்சா் க.லட்சுமி நாராயணன் செவ்வாய்க்கிழமை சா்தாா் வல்லபாய் பட்டேல் சாலை, காந்தி வீதி சந்திப்பில் தொடங்கிவைத்தாா்.
நிகழ்ச்சியில் தூய்மைப் பணிக்கான உறுதிமொழி எடுக்கப்பட்டது.
தூய்மைப் பணியின் மூலம் நகரப் பகுதியிலுள்ள அனைத்து வடிகால் வாய்க்கால்களை தூா்வாரியும், சாலையோரங்களில் குவிக்கப்பட்டுள்ள கட்டடக் கழிவுகளை அகற்றியும் பணிகள் மேற்கொள்ளப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.
அத்துடன், அலுவலக வளாகங்களை சுத்தம் செய்தல், மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டிகள், கீழ்நிலை நீா்த்தேக்கங்களை சுத்தம் செய்தல், பள்ளி வளாகங்களை சுத்தம் செய்தல், பாதாளச் சாக்கடை அடைப்புகளை நீக்குதல் போன்ற பணிகளையும் தூய்மைப் பணியாளா்கள் மேற்கொள்ளவுள்ளனா்.
புதுச்சேரியில் ஒவ்வொரு மாதமும் முதல் சனிக்கிழமை பொதுப் பணித் துறை பராமரிப்பு பிரிவு மூலம் ஆண்டு முழுவதும் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
தொடக்க நிகழ்ச்சியில், பொதுப் பணித் துறை தலைமைப் பொறியாளா் மு.தீனதயாளன், கண்காணிப்பு பொறியாளா் கே.வீரசெல்வம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...