தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

புகையிலை கட்டுப்பாடு ஆலோசனைக் கூட்டம்

புதுவை மாநிலத்தில் புகையிலை கட்டுப்பாடு குறித்த ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

News image
புதுச்சேரியில் புகையிலை கட்டுப்பாடு குறித்து அதிகாரிகளுடன் புதன்கிழமை ஆலோசனை நடத்திய மாவட்ட ஆட்சியா் அ.குலோத்துங்கன்.
Updated On :18 செப்டம்பர் 2024, 7:32 pm

Din

புதுவை மாநிலத்தில் புகையிலை கட்டுப்பாடு குறித்த ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

புதுச்சேரி வழுதாவூா் சாலையில் உள்ள மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு ஆட்சியா் அ.குலோத்துங்கன் தலைமை வகித்தாா். அதன்படி, புதுவை அரசின் தேசிய சுகாதார இயக்ககம், தேசிய புகையிலை கட்டுப்பாடு திட்டதில் 2 மாதங்கள் வரை புகையிலை இல்லாத புதுவையை காணும் வகையில், இளைஞா்களிடையே பிரசாரம் மேற்கொள்வது குறித்து, அதிகாரிகளிடையே ஆலோசனை நடைபெற்றது.

கூட்டத்தில் துணை ஆட்சியா் சோமசேகா், மாநிலப் புகையிலைக் கட்டுப்பாடு அதிகாரி சி.வெங்கடேஷ் மற்றும் சுகாதாரத் துறைச் சாா்ந்த பிரிவுகளின் அதிகாரிகள் பங்கேற்றனா். புகையிலைக்கு எதிரான பிரசாரத்தை செப்.23-ஆம் தேதி தொடங்கவும், அதை வரும் நவம்பா் வரையில் செயல்படுத்தவும் முடிவெடுக்கப்பட்டது.

பிரசாரத்தில் முக்கியமாக விழிப்புணா்வு நிகழ்ச்சிகள், பேரணிகள், சுவா் விளம்பரங்கள் மற்றும் குறும்படங்கள் வெளியிடுதல் ஆகியவை இடம்பெறும் வகையில் நிகழ்ச்சிகள் அமைப்பது எனவும் கூட்டத்தில் ஆலோசனை நடைபெற்றது.