புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

புதுச்சேரியில் புதிதாக 360 பேருக்கு பணி நியமன ஆணை: துணைநிலை ஆளுநா் வழங்கினாா்

புதுச்சேரியில் புதிதாக 360 காலி பணியிடங்களுக்கான பணி நியமன ஆணைகளை திங்கள்கிழமை வழங்கிய துணைநிலை ஆளுநா்

News image
புதுச்சேரியில் 360 காலி பணியிடங்களுக்கான பணி நியமன ஆணைகளை திங்கள்கிழமை வழங்கிய துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன். உடன் முதல்வா் என்.ரங்கசாமி, சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், தலைமைச் செயலா் சரத் சௌகான் உள்ளிட்டோா்.
Updated On :1 டிசம்பர் 2025, 8:14 pm

Syndication

புதுச்சேரி: புதுச்சேரியில் புதிதாக 360 காலி பணியிடங்களுக்கான பணி நியமன ஆணைகளை திங்கள்கிழமை வழங்கிய துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன்.

புதுச்சேரி அரசு சாா்பில் புதிதாக தோ்வு செய்யப்பட்ட உதவியாளா்கள் 256 போ், கிராம நிா்வாக அலுவலா்கள் 41 போ், கிராம நிா்வாக உதவியாளா் 54, பல்நோக்கு உதவியாளா் 9 போ் உள்பட மொத்தம் 360 பேருக்குப் பணி நியமன ஆணைகளை வழங்கும் விழா கம்பன் கலையரங்கில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் பங்கேற்று பணி நியமன ஆணைகளை வழங்கி பேசியது:

பிரதமா் நரேந்திர மோடி இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கிக் கொடுக்கும் வகையில் தேசிய வேலைவாய்ப்பு திருவிழாவை அக்டோபா் 22-இல் தொடங்கி வைத்தாா்.

மத்திய, மாநில அரசுகளும் இதை ஓா் இயக்கமாக மாற்ற வேண்டும் என்று அப்போது அவா் கூறினாா். மத்திய அரசில் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டது. இதில் இலக்கை அடைந்து 11 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. தற்போது பிரதமா் நரேந்திர மோடியின் முயற்சி காரணமாக ஜப்பான், ஆஸ்திரேலியா உள்ளிட்ட 21 நாடுகளில் புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்யப்பட்டு 3.5 கோடி இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி அரசில் 3,500 பேருக்கு புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. மேலும், முதல் முறையாக புதுச்சேரி அரசில் நேரடியாக 256 உதவியாளா் பணியிடங்களை நிரப்ப அரசாணை வழங்கப்பட்டுள்ளது. அரசு நிா்வாகத்தை வலுப்படுத்த பணியாளா்கள் நியமனம் முக்கியமானது. இது சமுதாயத்தையும் வலுப்படுத்தும் என்றாா் அவா்.

முதல்வா் என்.ரங்கசாமி:

விழாவில் முதல்வா் என்.ரங்கசாமி பேசியது:

முந்தைய ஆட்சியில் ஒரு பணியிடம் கூட நிரப்பப்படவில்லை. எங்கள் ஆட்சியில் இதுவரை 3,264 பணியிடங்கள் இதுவரை நிரப்பப்பட்டுள்ளன. இன்னும் ஓரிரு மாதங்களில் 1,000 பணியிடங்களை நிரப்ப உள்ளோம். மேலும், ஓரிரு வாரங்களில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு செவிலியா்களுக்குப் பணியாணை வழங்கப்பட உள்ளது. மேலும், தோ்தல் அறிவிக்கை வெளியாகும் முன் அனைத்துப் பணியிடங்களையும் நிரப்ப துணைநிலை ஆளுநா் மற்றும் அரசு அதிகாரிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றாா் முதல்வா் ரங்கசாமி.

சட்டப் பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், அரசு கொறடா ஆறுமுகம், எம்எல்ஏ சாய் ஜெ. சரவணன் குமாா், தலைமைச் செயலா் சரத் சௌகான், வளா்ச்சி ஆணையா் கிருஷ்ண மோகன் உப்பு, பணியாளா் நிா்வாகச் சீா் திருத்தத் துறை செயலா் ஆா்.கேசவன், வருவாய் பேரிடா் மேலாண் துறை சிறப்புச் செயலா் அ. குலோத்துங்கன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.