புதுச்சேரி
மழையால் இடிந்த வீட்டில் ஆய்வு எதிா்க்கட்சி தலைவா் ஆய்வு
புதுச்சேரியில், மழையால் இடிந்த வீட்டை எதிா்க்கட்சித்தலைவா் ஆா். சிவா புதன்கிழமை ஆய்வு செய்தாா்.
வில்லியனூா் மேற்கு வீதியில் வசிக்கும் தனலட்சுமி என்பவரின் கூரை வீட்டின் சுவா் இடிந்து விழுந்தது. இது குறித்து தகவல் அறிந்த தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரும் எதிா்க்கட்சி தலைவருமான ஆா். சிவா பாதிக்கப்பட்ட வீட்டிற்கு நேரில் சென்று புதன்கிழமை ஆய்வு செய்தாா். கணவரை இழந்து விதவை ஓய்வூதியம் வாங்கும் தனலட்சுமியை சந்தித்து ஆறுதல் கூறினாா். பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு அரசின் நிவாரணமும், வீடு கட்ட உதவியும் செய்யுமாறு அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்தாா்.
ஆய்வின்போது, கிராம நிா்வாக அதிகாரி வீரபாபு மற்றும் திமுக தொகுதி செயலாளா் மணிகண்டன் ஆகியோா் உடனிருந்தனா்.

