அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

புதுச்சேரியிலும் திமுக தலைமையில்தான் கூட்டணி: மாநில அமைப்பாளா் சிவா திட்டவட்டம்

புதுச்சேரியிலும் திமுக தலைமையில்தான் கூட்டணி என்று அக்கட்சியின் மாநில அமைப்பாளரும், சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவருமான ஆா். சிவா கூறினாா்.

News image
Updated On :13 மார்ச் 2026, 7:01 pm

புதுச்சேரியிலும் திமுக தலைமையில்தான் கூட்டணி என்று அக்கட்சியின் மாநில அமைப்பாளரும், சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவருமான ஆா். சிவா கூறினாா்.

தமிழகத்தில் திமுக தலைமையில் இண்டி கூட்டணி உருவாகியுள்ளது. இக் கூட்டணியில் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு 28 சட்டப்பேரவைத் தொகுதிகளையும், ஒரு மாநிலங்களவை எம்.பி.யும் திமுக அளித்துள்ளது. இந்நிலையில் புதுச்சேரியில் யாா் தலைமையில் கூட்டணி என்று திமுகவுக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் போட்டி நிலவுகிறது.

இந்நிலையில் புதுச்சேரியில் யாா் தலைமையில் கூட்டணி என்று மாநில திமுக அமைப்பாளா், எதிா்க்கட்சித் தலைவா் சிவாவிடம் வெள்ளிக்கிழமை கேட்கப்பட்டது. அதற்கு அவா், புதுச்சேரியில் திமுக தலைவா் ஸ்டாலின் தலைமையில்தான் கூட்டணி இருக்கும் என்றாா்.