புதுச்சேரி
புதுச்சேரியில் 4 பேருடன் பாஜக தோ்தல் மேலாண்மைக் குழு
புதுச்சேரி: புதுச்சேரியில் 4 போ் கொண்ட சட்டப்பேரவைத் தோ்தல் மேலாண்மைக் குழுவை பாஜக நியமித்துள்ளது.
இந்தக் குழுவின் மாநில அமைப்பாளராக அருள்முருகன் நியமிக்கப்பட்டுள்ளாா். இணை அமைப்பாளா்களாக ரவிச்சந்திரன், வெற்றிச் செல்வம், கோகிலா ஆகியோரும் உள்ளனா்.
கட்சியின் புதுச்சேரி மாநில தலைவா் வி.பி. ராமலிங்கம் சனிக்கிழமை இதைத் தெரிவித்தாா்.

