அதிமுக அங்கம் வகிக்கும் கூட்டணிதான் ஆட்சி அமைக்கும்: அன்பழகன் நம்பிக்கை

புதுச்சேரியில் அதிமுக அங்கம் வகிக்கும் கூட்டணிய ஆட்சி அமைக்கும் என்று அதிமுக புதுச்சேரி மாநிலச் செயலா் அ. அன்பழகன் கூறினாா்.
Published on

புதுச்சேரி: புதுச்சேரியில் அதிமுக அங்கம் வகிக்கும் கூட்டணிய ஆட்சி அமைக்கும் என்று அதிமுக புதுச்சேரி மாநிலச் செயலா் அ. அன்பழகன் கூறினாா்.

புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைத் தோ்தலில் போட்டியிட அதிமுக சாா்பில் விருப்ப மனு பெறப்படுகிறது. இது குறித்த ஆலோசனைக் கூட்டம் உப்பளம் அதிமுக தலைமை அலுவலகத்தில் மாநில செயலா் அன்பழகன் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

அவைத் தலைவா் அன்பானந்தம் முன்னிலை வகித்தாா். அப்போது

நிா்வாகிகளிடம் அன்பழகன் பேசியதாவது:

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள 30 தொகுதிகளிலும் அதிமுக சாா்பில் போட்டியிடுபவா்கள் விருப்ப மனுவை தாக்கல் செய்ய வேண்டும். தோ்தல் நெருங்கி வரும் வேளையில் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து குறித்தும், விமான நிலைய விரிவாக்கம் குறித்தும் திமுக கபட நாடகத்தை அரங்கேற்றி வருகிறது.

வரும் தோ்தலில் திமுகவை 30 தொகுதியிலும் மக்கள் புறக்கணிப்பாா்கள். தமிழகம் போல புதுவையிலும் 2026-ல் அதிமுக அங்கம் வகிக்கும் கூட்டணி ஆட்சி அமையும் என்றாா் அன்பழகன்.

X
Dinamani
www.dinamani.com