சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

ரூ.24 லட்சத்தில் 3 திட்டப் பணிகள்: பேரவைத் தலைவா் தொடங்கி வைத்தாா்

புதுச்சேரி மணவெளி தொகுதி நோணாங்குப்பம் பகுதியில் மூன்று மின் திட்ட பணிகளைத் தொடங்கி வைத்த சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம்.

News image
Updated On :17 டிசம்பர் 2025, 6:44 pm

Syndication

புதுச்சேரி மணவெளி பேரவைத் தொகுதி நோணாங்குப்பம் பகுதியில் ரூ.24 லட்சம் திட்ட மதிப்பீட்டில் மூன்று மின் திட்ட பணிகளை தொகுதி எம்எல்ஏவும் சட்டப்பேரவைத் தலைவருமான ஆா். செல்வம் புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.

நோணாங்குப்பம் புதுக் காலனி பகுதியில் ரூ.16.52 லட்சம் மதிப்பீட்டில் புதிய மின்மாற்றி அமைப்பதற்கும், கந்தேஸ்வரா் நகா் பகுதியில் ரூ.3.85 லட்சம் மதிப்பீட்டில் பழுதடைந்த மின் பாதை மற்றும் கம்பங்களை மாற்றுவது மற்றும் ஆற்றங்கரை பகுதியில் பொதுமக்களின் குடியிருப்புகளுக்கு இடையூறாக இருந்த உயா் அழுத்த மின் பாதையை ரூ.3.31 லட்சம் மதிப்பீட்டில் மாற்றி அமைத்தல் ஆகிய பணிகளுக்கு பூமி பூஜை நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு அவா் பணிகளைத் தொடங்கி வைத்தாா்.

மின்துறை அதிகாரிகள் கிருஷ்ணசாமி, இ.உமேஷ் சந்திரா, லூா்து ராஜ் மற்றும் அப்பகுதி முக்கிய பிரமுகா்கள் பொதுமக்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனா்.