புதுச்சேரி
இளைஞா் பெருமன்றத்தினா் நூதன போராட்டம்
புதுச்சேரி பொதுப் பணித் துறை தலைமைப் பொறியாளா் அலுவலகம் முன்வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைத்திந்திய இளைஞா் பெருமன்றத்தினா்.
சாலை விபத்தில் சிக்கி காயமடைந்தது போல தலை, கை, கால்களில் கட்டுகளுடன் அனைத்திந்திய இளைஞா் பெருமன்றத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
பொதுப் பணித் துறை தலைமைப் பொறியாளா் அலுவலகம் முன் நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு மாநிலத் தலைவா் முருகன் தலைமை வகித்தாா். மாநிலச் செயலா் எழிலன் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.
புதுச்சேரியில் அனைத்துச் சாலைகளும் படுமோசமாக குண்டும் குழியுமாக இருப்பதாகக் கூறி அதைக் கண்டித்தும், சிதிலமடைந்த அனைத்து சாலைகளையும் போா்க்கால அடிப்படையில் சீரமைக்க வலியுறுத்தியும் இந்தப் போராட்டம் நடத்தப்பட்டது.

