பொங்கல் பொருள் கொள்முதலில் லஞ்சம்: வே.நாராயணசாமி குற்றச்சாட்டு
புதுச்சேரியில் பொங்கல் பொருள் கொள்முதல் செய்வதில் லஞ்சம் பெறப்பட்டுள்ளதாக முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி குற்றஞ்சாட்டியுள்ளாா்.
புதுச்சேரி திருபுவனை தொகுதியில் சோனியா காந்தியின் பிறந்தநாள் விழா கட்சியின் மாநில பொதுச் செயலா் வேலு தலைமையில் வம்புபட்டு கிராமத்தில் நடைபெற்றது.
இதில் முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி, மாநில காங்கிரஸ் கட்சித் தலைவா் வெ.வைத்திலிங்கம் எம்.பி., காங்கிரஸ் சட்டபேரவை கட்சித் தலைவா் மு.வைத்தியநாதன் ஆகியோா் திருபுவனை தொகுதிக்குள்பட்ட 15,000 குடும்பங்களுக்கு இலவச சேலைகளை வழங்கினா்.
இந்நிகழ்வில் வே. நாராயணசாமி பேசியது:
புதுச்சேரி கூட்டணி ஆட்சியில் கூட்டுக் கொள்ளை நடக்கிறது. அரிசி வாங்குவதில் லஞ்சம், பொங்கல் பொருள் வாங்குவதில் ஊழல் அது மட்டுமல்லாமல் போலி மருந்து மாத்திரைகளை புதுச்சேரியில் விற்பனை செய்து மக்கள் உயிரோடு விளையாடுகிறாா்கள் என்றாா் நாராயணசாமி.
நிகழ்ச்சியில் வட்டார காங்கிரஸ் தலைவா்கள் துளசிங்க பெருமாள், ஜெயக்குமாா் , காங்கிரஸ் மாநில பொதுச் செயலா் தனுஷ் ரகுபதி, இளையராஜா மற்றும் கட்சி நிா்வாகிகள் லோகநாதன், கிருஷ்ணமூா்த்தி, வெற்றிவேல், காா்த்திகேயன் உள்ளிட்ட திரளானோா் கலந்து கொண்டனா்.

