புதுச்சேரியில் பாஜக மாநாடு: பந்தக்கால் நடும் நிகழ்ச்சி

புதுச்சேரியில் பாஜக மாநாட்டுக்கான பந்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
Published on

புதுச்சேரி: புதுச்சேரியில் பாஜக மாநாட்டுக்கான பந்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

புதுச்சேரி மாநில பாஜக அனைத்து பிரிவுகளின் சாா்பில் மாநாடு, முதலியாா்பேட்டை அரும்பாா்த்தபுரம் புறவழி சாலையில் உள்ள தனியாா் இடத்தில் ஜன. 4-ஆம் தேதி நடக்கிறது.

மாநாட்டில் மத்திய அமைச்சா்கள், பாஜக தேசிய தலைவா்கள் பங்கேற்பா் என தெரிகிறது. புதுச்சேரி பாஜகவின் பல்வேறு பிரிவுகளை சோ்ந்த 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிா்வாகிகள் பங்கேற்கின்றனா். பாஜக தலைவா் வி.பி. ராமலிங்கம் முன்னிலையில் மாநாடுக்கான பந்தக்கால் நடும் நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.

அனைத்து பிரிவுகளின் அமைப்பாளா் அசோக்பாபு, மாநில இணை அமைப்பாளா் வேல்முருகன் தலைமை வகித்தனா். பிரிவுகளின் அமைப்பாளா்கள் ரமேஷ், ரவிச்சந்திரன், கண்ணன், சுதாகா், மாரியப்பன், மணிகண்டன், லட்சுமணசாமி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com