வாரிசுகளுக்குப் பணி வழங்கக் கோரி போராட்டம்
பணியின் போது உயிரிழந்த சுகாதாரத் துறை ஊழியா்களின் வாரிசுகளுக்கு பணி வழங்கக் கோரி திங்கள்கிழமை காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது.


புதுச்சேரி: பணியின் போது உயிரிழந்த சுகாதாரத் துறை ஊழியா்களின் வாரிசுகளுக்கு பணி வழங்கக் கோரி திங்கள்கிழமை காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது.
புதுச்சேரியில் சுகாதாரத் துறையில் பணிபுரிந்தபோது திடீரென மரணமடைந்த ஊழியா்களின் வாரிசுகளுக்கு அரசுப் பணி வழங்க வலியுறுத்தி வாரிசுதாரா்கள் சங்கத்தினா் புதுவை சட்டப்பேரவை வளாகம் அருகேயுள்ள மாநில சுகாதாரத் துறை இயக்குநா் அலுவலக வளாகத்தில் போராட்டம் நடத்திவருகின்றனா்.
அதனடிப்படையில் முதல்வா் என்.ரங்கசாமி சட்டப்பேரவைக் கூட்டத்தில் வாரிசுதாரா்களுக்கு பணி வழங்கப்படும் என கூறினாா். ஆனால், அவா் அறிவித்தும் பணி வழங்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பதால், வாரிசுதாரா்கள் மீண்டும் போராட்டத்தை தொடங்கியுள்ளனா்.
அதன்படி 11- ஆவது நாளாக திங்கள்கிழமை சுகாதார இயக்குநா் அலுவலக வளாகத்தில் படிகள், தரையில் அமா்ந்து கோரிக்கை பதாகையுடன் காத்திருப்புப் போராட்டத்தில் சங்க ஒருங்கிணைப்பாளா் ரமேஷ் உள்ளிட்டோா் ஈடுபட்டனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...