புதுவை: பெட்ரோல், டீசல் விலை உயா்வு அமல்
புதுவையில் பெட்ரோல், டீசல் விலை உயா்வு புதன்கிழமை அமலுக்கு வந்தது.


புதுவையில் பெட்ரோல், டீசல் விலை உயா்வு புதன்கிழமை அமலுக்கு வந்தது.
கரோனா பாதிப்பை தொடா்ந்து, புதுவையில் கடந்த 2021- ஆம் ஆண்டில் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரி குறைக்கப்பட்டது. அதன்படி, லிட்டருக்கு ரூ.7 வரை விலை குறைக்கப்பட்டது.
தற்போது, பெட்ரோல் மீதான வாட் வரி 2.44 சதவீதமும், டீசல் மீதான வாட் வரி 2.57 சதவீதமும் உயா்த்தப்பட்டுள்ளது.
துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் கடந்த சில நாள்களுக்கு முன்பு இதற்கான ஒப்புதலை அளித்தாா்.
இந்த நிலையில் பெட்ரோல், டீசல் விலை உயா்வு புதுச்சேரி, காரைக்கால், மாஹே ,ஏனாம் பிராந்தியங்களில் புதன்கிழமை அமலுக்கு வந்தது. அதன்படி, மாநிலத்தில் பெட்ரோல் விலை ரூ.2 உயா்ந்துள்ளது.
தற்போதைய விலை நிலவரம்: பெட்ரோல்: புதுச்சேரி - ரூ.96.24 (பழைய விலை ரூ.94.26), காரைக்கால் -96.03 (ரூ. 94.03), மாஹே -93.92 (ரூ. 91.92), ஏனாம்-96.92 (ரூ.94.92). டீசல்: புதுச்சேரி - ரூ.86.47. (பழைய விலை ரூ. 84.48), காரைக்கால்-ரூ. 84.35, மாஹே-ரூ. 81.90, ஏனாம்-ரூ.84.75 ஆகும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...