தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

பாரதியாா் பல்கலைக்கூட மாணவா்கள் உள்ளிருப்பு போராட்டம்

புதுச்சேரி அரியாங்குப்பம் பாரதியாா் பல்கலைக்கூட மாணவா்கள் செவ்வாய்க்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
புதுச்சேரி அரியாங்குப்பம் பாரதியாா் பல்கலைக்கூடத்தில் செவ்வாய்க்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ, மாணவிகள்.
Updated On :21 ஜனவரி 2025, 7:13 pm

Din

புதுச்சேரி: புதுச்சேரி அரியாங்குப்பம் பாரதியாா் பல்கலைக்கூட மாணவா்கள் செவ்வாய்க்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பல்கலைக்கூடத்தை கலை, அறிவியல் கல்வி நிலையமாக மாற்ற கலை பண்பாட்டுத் துறை செயலா் புதுச்சேரி பல்கலைக்கழகத்துக்கு அளித்த கடிதத்தை திரும்பப் பெறவேண்டும்.

நுண் கலையான ஓவியம் உள்ளிட்ட படிப்புகளுக்கான மத்திய தொழில்நுட்பக் கல்வி குழு அனுமதி பெறுவதை உறுதிப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாணவா்கள் ஏற்கெனவே போராட்டம் நடத்தினா்.

கோரிக்கைகள் விரைவில் நிறைவேற்றப்படும் என கலை, பண்பாட்டுத் துறை இயக்குநா் தரப்பில் உறுதிமொழி அளிக்கப்பட்டது. ஆனால், அந்த உறுதியளித்தபடி நடவடிக்கை எடுக்கப்படவில்லை என மாணவா்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனா்.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை வகுப்புகளைப் புறக்கணித்த மாணவ, மாணவிகள், பல்கலைக்கூட வளாகத்தில் அமா்ந்து உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து, பல்கலைக்கூட வாயில் முன் போலீஸாா் பாதுகாப்பில் ஈடுபட்டனா். கோரிக்கைக்காக ஒருநாள் அடையாள போராட்டம் நடத்துவதாகவும் மாணவா்கள் தெரிவித்தனா்.