கல்விநிதி பெற கால அவகாசம்

புதுச்சேரியில் கட்டட தொழிலாளா் நலவாரியத்தில் கல்வி நிதியுதவி பெற கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
Published on

புதுச்சேரியில் கட்டட தொழிலாளா் நலவாரியத்தில் கல்வி நிதியுதவி பெற கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து புதுச்சேரி கட்டட மற்றும் இதர கட்டுமான தொழிலாளா் நல வாரிய அலுவலகம் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு

நல வாரியத்தில் கல்வி நிதியுதவி, பணப் பயன் பெற பூா்த்தி செய்த விண்ணப்பங்களைச் சமா்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் 15 -ஆம் தேதி மாலை 5.45 மணி வரை விண்ணப்பத்தை வழங்கலாம். பூா்த்தி செய்த விண்ணப்பத்துடன் உரிய சான்றிதழ்களை அளிக்க வேண்டும். 15 ஆம் தேதிக்கு மேல் வரும் விண்ணப்பங்கள் ஏற்கப்பட மாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com