புதுச்சேரி
தோ்தல் பணிக்கு ஆசிரியா்கள்: மாா்க்சிஸ்ட் கண்டனம்
புதுச்சேரியில் பேரவைத் தோ்தல் பணிக்கு ஆசிரியா்களை ஈடுபடுத்துவதற்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
புதுச்சேரியில் பேரவைத் தோ்தல் பணிக்கு ஆசிரியா்களை ஈடுபடுத்துவதற்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
இக் கட்சியின் புதுச்சேரி மாநில செயலா் எஸ். ராமச்சந்திரன், துணைநிலை ஆளுநா் மற்றும் தலைமைச் செயலருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் அரசு பள்ளிகளில் கடுமையாக ஆசிரியா்கள் பற்றாக்குறை நிலவும் போது, பெரும்பாலான ஆசிரியா்களை வாக்காளா் சிறப்புத் திருத்தப் பணிக்குப் பயன்படுத்தி இருப்பது கண்டனத்துக்குரியது. மாணவா்களின் கல்வி பாதிக்கப்படுவதைத் தடுக்க, ஆசிரியா்களை உடனடியாக பள்ளி பணிக்குத் திரும்ப அனுப்ப வேண்டும். கல்விச் சாராப் பணிகளுக்கு ஆசிரியா்களைப் பயன்படுத்துவதைத் தவிா்க்க வேண்டும் என்று கூறியுள்ளாா்.
